மதுரையில் இனி சனி, ஞாயிறும் வரி செலுத்தலாம்... கடைசி தேதி நெருங்குவதால் உடனே செலுத்துங்கள்!
வரி மற்றும் வரியில்லா இனங்களை நிலுவையின்றி உடனடியாக செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களை நிலுவையின்றி உடனடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தினமும் தீவிர வரி வசூல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வரி வசூல் மையங்கள் செயல்படும். மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலத்திற்கு உட்பட்ட 100 வார்டுப் பகுதிகளில் 2025-2026 ஆம் ஆண்டுக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம், தொழில் வரி ஆகிய வருவாய் இனங்கள் மற்றும் மாநகராட்சி கடைகளுக்கான வரியில்லாத இனங்களை வருவாய் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் தினமும் தீவிர வரி வசூல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி செலுத்தலாம்
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் எளிதாக வரி செலுத்தும் வகையில் எதிர்வரும் 31.03.2026 வரை அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்கள் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட இருக்கிறது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களை நிலுவையின்றி உடனடியாக செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.























