மேலும் அறிய

PAK AFG Clash: போரை அறிவித்த பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் பதிலடி - குவியும் பிணங்கள், எல்லையில் நடப்பது என்ன?

PAK AFG Clash: ஆஃப்கானிஸ்தான் மீது போரை தொடங்குவதாக பாகிஸ்தான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PAK AFG Clash: பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரை அறிவித்த பாகிஸ்தான்:

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் தாலிபன்கள் ஆட்சி நடைபெறும் ஆஃப்கானிஸ்தான் மீது நேரடியான போரை இஸ்லாமாபாத் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தான் படைகள் எல்லையில் தாக்குதல் நடத்தின. அடுத்த சில மணி நேரத்திலேயே, ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் காந்தஹாரில் பாகிஸ்தான் குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பதற்றம் வெடித்தது. இதையடுத்து, ஆஃப்கானிஸ்தான் மீது வெளிப்படையான போரை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

”பொறுமை முடிவுற்றது”

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எங்களது பொறுமை அதன் முடிவை எட்டிவிட்டது. தற்போது இது எங்களுக்கு இடையேயான வெளிப்படையான போர்” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக எல்லையில் தீவிரமடைந்த மோதலுக்கு மத்தியிலும் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 

ஆஃப்கானிஸ்தான் சொல்வது என்ன?

காபூலில் குறைந்தபட்சம் மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தாலும், பாதிப்புகள் தொடர்பான தகவல் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.’ உயிரிழப்பு ஏதும் நிகழ்ந்ததா? என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.  தெற்கே உள்ள காந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பாக்டியாவிலும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தாலிபான் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய கொடிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வியாழக்கிழமை இரவு எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் தங்களது ராணுவம் தாக்குதலைத் தொடங்கியதாகவும், எதிரி நாட்டின் 55 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ஆஃப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தரைவழித் தாக்குதலில் தனது எட்டு வீரர்களும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் சிலர் காயமடைந்தாலும், பாகிஸ்தானின் பல ராணுவ மையங்கள் கைப்பற்றப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சொல்வது என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஃப்கானிஸ்தானில் டந்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் என்பவை,  அப்பகுதியில் பதுங்கியிருந்த ஆயுதக் குழுவினரை அழிப்பதற்கானது என பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வியாழக்கிழமை நடந்த ஆப்கானிஸ்தான் தாக்குதல் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் நடத்தப்பட்டது என்றும், ராணுவ நிலைகள் ஆஃப்கானிஸ்தானால்  கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது உண்மை இல்லை எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் நடந்த மோதலுக்குப்  பின்னர் இருநாடுகளின்  எல்லைகளும் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானுக்கு இடையே மோதல் ஏற்பட என்ன காரணம்?

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தான் படைகள் எல்லையில் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது குண்டுவீசியதால் பதற்றம் வெடித்தது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் என்ன கூறினார்?

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், 'எங்களது பொறுமை அதன் முடிவை எட்டிவிட்டது. தற்போது இது எங்களுக்கு இடையேயான வெளிப்படையான போர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதா?

காபூலில் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன, ஆனால் பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

ஆப்கானிஸ்தான் தரைவழித் தாக்குதலில் எத்தனை வீரர்கள் கொல்லப்பட்டனர்?

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, தரைவழித் தாக்குதலில் அவர்களின் எட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் எதற்காக?

பாகிஸ்தான் அரசாங்கம், அப்பகுதியில் பதுங்கியிருந்த ஆயுதக் குழுவினரை அழிப்பதற்காகவே வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Chennai Mini Bus : சென்னையில் 220 மினி பேருந்து.! சூப்பர் திட்டத்தை தொடங்கும் அரசு- எங்கிருந்து எங்கே இயக்கப்படுகிறது.?
சென்னையில் 220 மினி பேருந்து.! சூப்பர் திட்டத்தை தொடங்கும் அரசு- எங்கிருந்து எங்கே இயக்கப்படுகிறது.?
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
EPS in Edappadi constituency : எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
Embed widget