மேலும் அறிய
இந்தியாவிற்கே அ.தி.மு.க., தான் ரோல் மாடல் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பெருமிதம் !
தமிழக மக்களும் தமிழர்களின் பிள்ளைகளும் படிக்கக்கூடாது அப்பதான் (திமுக )அவங்க குடும்பம் சொகுசா வாழும் - செல்லூர் ராஜு பேச்சு.

செல்லூர் ராஜு
Source : whatsapp
”செல்லூர் ராஜு ஒரு புது கண்டுபிடிப்பு” - என்று நம்மள ஓட்டுறதுல நம்ம டிவி காரங்க மாதிரி ஆளே இல்ல. சிரித்து, சிரித்து என்னை சிறையில் இட்டால் - நம்ம சொன்னது எல்லாம் வேற தா இருக்கும் ஆனா வேற ஒன்ன போட்டு விடுவாங்க நம்ம டிவிகாரங்க - மதுரை பொதுக்கூட்டத்தில் செல்லூர் ராஜு கலகல பேச்சு.
ஜெயலிலாதா பிறந்தநாள் விழாவில் செல்லூர் ராஜு பேச்சு
மதுரை முனிச்சாலை பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று செல்லூர் ராஜு பேசும் போது...,” வீட்டு வாரி, விலைவாசி, மின் கட்டணம், குடிநீர் வழி, பாதாள சாக்கடை வரி என வரி மேல் வரி போட்டு திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டனர். தமிழகத்திற்கு சிறந்த ஆட்சியை வழங்கியது அதிமுக மட்டுமே, இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கெல்லாம் ரோல் மாடல் ஆட்சி அதிமுக ஆட்சி, புரட்சித் தலைவரை தொடர்ந்து அம்மா ஜெயலலிதாவும் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கினார்கள். அந்த வரிசையில் எடப்பாடி சிறந்த நிர்வாகத்தை நிர்ணயித்து ஆட்சி நடத்தினார். பல்வேறு புதுப்புது திட்டங்கள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எடப்பாடி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது. ஜெயலலிதா அம்மா ஆட்சியில் பெண்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டது பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டியவர் புரட்சி தலைவி.
செல்லூர் ராஜு ஒரு புது கண்டுபிடிப்பு என செய்தி போடுவாங்க
செல்லூர் ராஜு ஒரு புது கண்டுபிடிப்பு, நம்மள ஓட்டுறதுல நம்ம டிவி காரங்க மாதிரி ஆளே இல்ல, சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டால் - நம்ம சொன்னது எல்லாம் வேற தா இருக்கும் ஆனா வேற ஒன்ன போட்டு விடுவாங்க நம்ம டிவிகாரங்க. திமுக காரன் மாறி நாடக காரன் எவனும் கிடையாது, கலைஞர் குடும்பம் என்பதற்கு உதாரணம் அவர் குடும்பத்தின் நடிப்பு தான் குடும்பமே நடிப்புக்குடும்பம். ஏப்பா டிவிகாரங்க நீங்க பாட்டு எதையாச்சும் டிஆர்பிக்கு எடுத்து போட்டுடாதீங்க. அண்ணன் ஆட்சியில் ஒரு சொட்டு மது கூட இருக்காது என கனிமொழி கூறினார். ஆனால் அதைப்பற்றி தற்போது அவர் வாய் திறப்பதே இல்லை. பல்வேறு தேர்தல் அறிக்கைகளை திமுக அடுக்கி வருகிறது. ஆனால் திமுக தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள்.
வீட்டில், பூனை - நாய் வளர்ப்பதற்கு வரி
வீட்டில், பூனை - நாய் வளர்ப்பதற்கு வரி எந்த ஆட்சியிலாவது நடந்திருக்கா? ஆனால் திமுக ஆட்சியில் அதெல்லாம் நடக்கும். எடப்பாடியாரின் தேர்தல் அறிக்கையை பார்த்து திடீரென முதல்வர் இப்போது தேர்தல் நேரத்தில் கோடை கால நிதி கொடுக்கிறார். எடப்பாடியின் தேர்தல் அறிக்கையால் திமுக கூட்டணிக்கு இடிமேல், இடி விழுந்து கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சி சாதனை எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் பேசப்படும். திமுக நிறைவேற்றாத திட்டங்களை அதிமுக செயல்படுத்தும். இது தான் அம்மா பிறந்தநாள் கூட்டத்தின் சபதம் மதுரையில் பத்து தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் ஒரு விரல் புரட்சி செய்ய மக்கள் தயாராகி விட்டனர் என்றார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























