விருதுநகரில் ரூ.17.68 கோடி மதிப்பீட்டில் புதிய வசதிகள்: அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் !
6 முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ரூ.17.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.17.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
ரூ.17.68 கோடி மதிப்பில் புதிய பாலம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(26.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தம் ரூ.17.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஆனந்தி தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்ச
அரசின் பணிகள்
இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பழமையான திருக்கோயில்களை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்தல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
ரூ.17.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதன்படி, இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ரூ.10.50 கோடி மதிப்பில் திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், ரூ.2.04 கோடி மதிப்பில் நான்கு சுகாதார வளாகங்கள் மற்றும் குளியலறைகள், ரூ.1.40 கோடி மதிப்பில் உட்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில் அலங்கார சுதை வேலைப்பாடுகள், ரூ.1.58 கோடி மதிப்பில் கோவிலுக்கு வரும் வழியில் 3 இடங்களில் நுழைவுத் தோரண வாயில்கள் மற்றும் கலையரங்கம், ரூ.2.16 கோடி மதிப்பில் வெளிப்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில் அலங்கார சுதை வேலைப்பாடுகள் மற்றும் சாலைப் பணிகள் ஆகிய மொத்தம் 6 முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ரூ.17.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.























