மேலும் அறிய
மதுரையில் பரபரப்பு... திடீரென தீப்பற்றி எரிந்த பாஜக பிரமுகரின் கார்
பா.ஜ.க பிரமுகரின் காரில் தீயணைப்பு துறையினர் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காரில் உள்ள பேட்டரியில் இருந்து தீ பற்றி எரிந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
பாஜக பிரமுகர் கார் தீ பிடித்து எரிந்தது
மதுரை மாநகர் ஆத்திகுளம் பழனிச்சாமிநகர் பகுதியை சேர்ந்த ராம்பிரசாத் என்பவர் தனது காரை மதுரை ஆத்திகுளம் சந்திப்பு பகுதியில் நிறுத்தியுள்ளார். பாஜக பிரமுகரான ராம் பிரசாத் தனது காரை சாலையோரத்தில் நிறுத்திசென்று அருகிலுள்ள டீ கடையில் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென ராம்பிரசாத்தின் மகேந்திரா XUV காரின் இன்ஜின் பகுதியில் புகை வெளியேற தொடங்கி தீப்பற்ற தொடங்கியுள்ளது. இதனால் கார் இன்ஜினில் மளமளவென தீ பரவியதையடுத்து அருகில் இருந்த கடைகளில் இருந்து அவசரமாக குடத்தில் உள்ள தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். பின்னா் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் காரில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது
மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள ஆத்திகுளம் பேருந்து நிறுத்தத்தின் அருகில் திடீரென பாஜக பிரமுகரின் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காரில் உள்ள பேட்டரியில் இருந்து தீ பற்றி எரிந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion