Nithya Menen : ஒரு நாள் ஷூட் இல்லனா தனுஷ் நிலைமை அவளோதான்...இட்லி கடை பட அனுபவங்களை பகிர்ந்த நிதயா மேனன்
ராயன் படத்திற்கு பின் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை படத்தில் தனது அனுபவத்தை நடிகை நித்யா மேனன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இட்லி கடை
ராயன் படத்திற்கு பின் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. சிறிய பட்ஜெட்டில் எளிய கிராமப்புற கதையை பின்னணியாக கொண்ட இந்த படத்தில் நிதயா மேனன் நாயகியாக நடித்து வருகிறார் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். டான் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. திருச்சிற்றம்பலம் படத்திற்கு பின் இந்த படத்தில் இரண்டாவது முறையாக தனுஷ் நித்யா மேனன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை நித்யா மேனன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தனுஷ் பற்றி நித்யா மேனன்
" தனுஷைப் பொறுத்தவரை அவருக்கு 24 * 7 வேலை செய்ய வேண்டும். ஒரு நாள் படப்பிடிப்பு இல்லை என்றால் அவரது நிலைமை மோசம் தான். எனக்கு செய்ய எந்த வேலையும் இல்லையே சும்மா இருந்து நான் என்ன செய்ய என புலம்புவார். நிஜ வாழ்க்கையோடு ஒன்றாமல் நிறைய இயக்குநர்கள் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் தனுஷ் அப்படி இல்லை. தன்னுடன் வேலை செய்யும் நடிகர்களின் நடிப்பை பாராட்டுவது தன்னைச் சுற்றி இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை ரசிப்பது என வாழ்க்கைக்கு மிக நெருக்கமானவராக இருக்கிறார். நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பது தான் அவரது நோக்கம்.
- Dhanush will be miserable even if the shoot gets pushed for a day, he would love to keep working and shoot 24 into 7 !
— Ryan (@Santossh01) October 17, 2024
- Dhanush has also narrated three more one liners, which are still in development and we would be working on them as well ! pic.twitter.com/uVodB8ssQP
என்னை பார்த்தால் அவர் இன்ஸ்பயர் ஆகிறார். அந்த இன்ஸ்பிரேஷனில் இருந்து அவருக்கு இன்னும் நிறைய கதைகள் தோன்றும். இந்த படம் தவிர இன்னும் 3 படங்களுக்கு ஒன்லைன் என்னிடம் சொல்லி இருக்கிறார். எனக்கு அந்த கதை பிடித்திருக்கிறது என்றால் அதை டெவலப் செய்யலாம் என்று சொல்வார். தனுஷ் மாதிரி தனது சக நடிகர்களின் நடிப்பை பாராட்டி அவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடிக்கும் ஒரு நடிகரை நாம் மிக அபூர்வமாகவே பாத்திருக்கிறேன். " என தனுஷ் தெரிவித்துள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

