மேலும் அறிய
Advertisement
Madurai Airport: துபாய் விமானத்தில் பழுது: 13 மணி நேரமாக போராடிய தொழில்நுட்ப வல்லுநர்கள்
புதிய டயர் மும்பையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மதுரைக்கும் விமானம் முலம் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டது
மதுரையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 13 மணி நேரம் தாமதம்.
தென் மாவட்டங்களின் குரல்
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக ஆக்க வேண்டும் என 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை இருந்து வரும் வேலையிலே முதலில் 24 மணி நேரம் செயல்படும் விமான நிலையமாக மாற்றினால் தான் சர்வதேச அந்தஸ்து கொடுக்க முடியும் என முட்டுக்கட்டை போட்டிருந்தது. 24 மணி நேர விமான சேவை இல்லாததால் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதியில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகள் திருவனந்தபுரம், சென்னை ஆகிய விமான நிலையங்களை பயன்படுத்தும் சூழல் இருந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் தென் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் அடிக்கடி இதற்காக குரல் எழுப்பி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதமே விமான நிலையத்தை 24 மணி நேரம் செயல்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. தொடர்ந்து மத்திய அரசு மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவையை தொடங்குவதற்கு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என விமான நிலைய அதிகாரி தகவல் தெரிவித்தனர். இந்த சூழலில் செயல்பாட்டிற்கு வந்தது குறிப்பிட தக்கது. இந்நிலையில் மதுரையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 13 மணி நேரம் தாமதமாக சென்றது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக 13 மணி நேரம் தாமதம்
துபாயிலிருந்து 181 பயணிகளுடன் நேற்று காலை 11.10 மணியளவில் ஸ்பைஸ் ஜெட் விமானம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பின்னர் மதுரையிலிருந்து துபாய்க்கு 176 பயணிகளுடன் பகல் 12.20 மணியளவில் இதில் 70பயணிகள் பயணத்தை ரத்து செய்யப்பட்டு சென்றனர். விமானத்தை தொழில்நுட்ப வல்லுநர்கள் சோதனை செய்த போது விமான சக்கரத்தில் உள்ள ஒரு டயரில் காற்று மிக குறைந்த அளவில் காணப்பட்டது. அதனை தொடர்ந்து எந்திரங்கள் மூலம் காற்று செலுத்தப்பட்டதில் காற்று நிரப்பப்படவில்லை தொடர்ந்து 13 மணி நேரத்திற்கு மேலாக தொழில்நுட்ப வல்லுநர்கள் சரி செய்தனர்.
மும்பையில் இருந்து புதிய டயர்கள்
புதிய டயர் மும்பையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மதுரைக்கும் விமானம் முலம் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து விமான நிலைய வளாகத்தில் 106 பயணிகள் காத்திருக்க வைக்கப்பட்டு பயணிகள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் அதிகாலை 1.45 மணி அளவில் விமானம் மதுரையில் இருந்து துபாய்க்கு சென்றடைந்ததனர், என ஸ்பைஜெட் விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 30 பயணிகள் பயணத்தை ரத்து செய்து வீடுகளுக்கு சென்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karthik Subbaraj : ஏன் என்கிட்ட இந்த கதைய சொல்ல...ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்த்து ரஜினி கொடுத்த ரியாக்ஷன்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - எந்த மொழிக்கும் தேசிய அந்தஸ்து இல்லை; இந்தி மாத கொண்டாட்டம் குறித்து முதல்வர் பிரதமருக்குக் கடிதம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion