மேலும் அறிய

எந்த மொழிக்கும் தேசிய அந்தஸ்து இல்லை; இந்தி மாத கொண்டாட்டம் குறித்து முதல்வர் பிரதமருக்குக் கடிதம்

இந்தி பேசாத மாநிலங்களில்‌ “இந்தி மாதம்‌” கொண்டாடப்படுவதைத்‌ தவிர்க்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌, இந்தியப்‌ பிரதமர்‌ நரேந்திர மோடிக்குக் கடிதம்‌ எழுதியுள்ளார்.

இந்தி பேசாத மாநிலங்களில்‌ “இந்தி மாதம்‌” கொண்டாடப்படுவதைத்‌ தவிர்க்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌, இந்தியப்‌ பிரதமர்‌ நரேந்திர மோடிக்குக் கடிதம்‌ எழுதியுள்ளார்.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின்‌ பொன்விழா கொண்டாட்டங்களுடன்‌ இணைந்து “இந்தி மாதம்‌ நிறைவு நாள்‌ விழா கொண்டாடப்படுவது எதிர்வரும் காலங்களில்‌ தவிர்க்கப்பட வேண்டும்‌ என்று தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இந்தியப்‌ பிரதமர்‌ நரேந்திர மோடிக்கு இன்று (18-10-2024) கடிதம்‌ எழுதியுள்ளார்‌.

அக்கடிதத்தில்‌, சென்னை தொலைக்காட்சி நிலையத்தின்‌ பொன் விழா நிகழ்ச்சிகளுடன்‌ இணைந்து 18-10-2024 அன்று நிறைவடையும்‌ இந்தி மாத நிறைவு விழா நடைபெறுவது குறித்து பிரதமர்‌ மோடியின் கவனத்திற்குக்‌ கொண்டுவரவே இந்தக்‌ கடிதத்தை தாம்‌ எழுதுவதாகக்‌ குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர்‌‌, அவ்விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர்‌ தலைமை தாங்கி நடத்த இருப்பதையும்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

இந்திய அரசியலமைப்புச்‌ சட்டம்‌ எந்த மொழிக்கும்‌ தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை என்றும்‌ சட்டமியற்றுதல்‌, நீதித் துறை மற்றும்‌ தகவல்‌ தொடர்பு போன்ற அலுவல்‌ நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும்‌ ஆங்கிலம்‌ பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்‌‌, இந்தியா போன்ற பல்வேறு மொழிகள்‌ பேசும்‌ நாட்டில்‌, இந்திக்கு தனி இடம்‌ அளிப்பதும்‌, இந்தி பேசாத மாநிலங்களில்‌ இந்தி மாதம்‌ கொண்டாடப்படுவதும்‌ பிற மொழிகளை சிறுமைப்படுத்தும்‌ முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்‌.

உள்ளூர்‌ மொழிக்கான மாதக்‌ கொண்டாட்டம்

எனவே, இந்தி பேசாத மாநிலங்களில்‌ இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத்‌ தவிர்க்கலாம்‌ அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால்‌, அந்தந்த மாநிலங்களின்‌ உள்ளூர்‌ மொழிக்கான மாதக்‌ கொண்டாட்டங்களையும்‌ அதேபோல்‌ கொண்டாடவேண்டும்‌ என்றும்‌ முதலமைச்சர்‌‌ தனது கடிதத்தில்‌ வலியுறுத்தியுள்ளார்‌.

மேலும்‌, இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின்‌ சிறப்பையும்‌ செழுமையையும்‌ கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம்‌ என்று தாம்‌ பரிந்துரைப்பதாகவும்‌ இது அனைவரிடையேயும்‌ ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும்‌ எனவும்‌ தெரிவித்துள்ளார்‌.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

Embed widget