இறந்த மனிதனை நிம்மதியா தகனம் செய்யவதில் கூட பிரச்சினையா ? - நீதிபதிகள் வேதனை
இறந்த மனிதனை நிம்மதியா தகனம் செய்யவதில் கூட பிரச்சினையா? - நீதிபதிகள் கேள்வி
சிவகாசி கீழத்திருத்தங்கல் கிராமத்தில் உள்ள நீர்நிலை கண்மாயில் தகனமேடை அமைக்க தடை விதிக்க கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த பால்பாண்டி, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கீழத்திருத்தங்கல் கிராமத்தில் சுமார் 2 ஹெக்டேர் விஸ்தீரணத்தில் நீர் நிலை உள்ளது. இது நீர்நிலைக்கண்மாய் விவசாயத்திற்கு மற்றும் அப்பகுதியின் நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ளது.
இந்த நீர் நிலையில் ஆக்கிரமித்து, உள்ளாட்சி அமைப்பு சார்பில் தகன மேடை அமைக்க உள்ளனர். நீர் நிலையில் அமைக்க கூடாது, தகனமேடை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளார். இந்த மனு நீதிபதிகள் P.N.பிரகாஷ், மற்றும் ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இறந்த மனிதனை நிம்மதியா தகனம் செய்யவதில் கூட பிரச்சினையா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீர் நிலையை வகைபடுத்த வில்லை. அதற்கு முன்னதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது ஏற்புடையது அல்ல.? என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மற்றொரு வழக்கு
ஆக்கிரமிப்பில் உள்ள மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து கொடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் பல்வேறு மாவட்டத்தில் உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுக்கா மனம்காத்தான் கிராமம் பகுதியில் 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த இடத்தை முறைப்படி அரசு நில அளவைக் கொண்டு அளவீடு செய்ய உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி. ஆர் சுவமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மதுரை ஆதீன மடம் மிகவும் பிரசித்த பெற்ற ஒரு சைவ மடம் ஆகும். இந்த மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள் பல உள்ளன. எனவே மனுதாரர் குறிப்பிட்ட இடத்தை அளவீடு செய்ய வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
மதுரை ஆதீனம் தரப்பில் இடத்தை அளவீடு செய்ய அரசுக்கு உரிய தொகை கட்ட வேண்டும். அதன் அடிப்படையில் அந்த இடத்தை அரசு அளவையர் வைத்து அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்