(Source: ECI/ABP News/ABP Majha)
OPS Case Judgement : அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது..! நீதிபதி பரபரப்பு தீர்ப்பு..! இபிஎஸ்க்கு பின்னடைவு!
OPS Case : ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு காலை 11 மணிக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில், நீதிபதி ஜெயச்சந்திரன் மதியம் 11.40 மணியளவில் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினர். அவர் அளித்த தீர்ப்பின்படி, பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும்பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டு உள்ளார். இதன் மூலம் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது.
முன்னதாக, அ.தி.மு.க.வில் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தியும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் நிர்வாகிகள் செயல்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கடுமையான மோதல் நிலவியதை அடுத்து, கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ஒருங்கிணைப்பாளரான தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு நடத்தப்படுவதாக மனுத்தாக்கல் செய்திருந்தார். பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்துவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை அப்போது விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று வழக்கைத் தள்ளுபடி செய்தார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு இந்த விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்