மேலும் அறிய
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய செய்திகள்..
மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது.

திருச்செந்தூர்
1. தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், திருச்செந்தூர் கோவில் கடற்கரை தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.
2. நெல்லை கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் டர்பனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த 18-ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
3. நெல்லை மாவட்டத்தில் நேற்று முன் தினம் 7 பேருக்கு கொரோனா தொற்றிய நிலையில் மேலும் 13 பேருக்கு தொற்று பரவியுள்ளது, இதில் மாநகரில் மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வட்டார அளவில் பாளையம்கோட்டை, ராதாபுரத்தில் தலா 2 பேருக்கும், அம்பையில் ஒருவருக்கும் தொற்று பரவியுள்ளது.
4. ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தேர்த்தங்கல் கிராமம். இந்த கிராமத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் பறவைகள் சரணாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்நிலையில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான பறவைகள் வரத் தொடங்கி உள்ளதால் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
5. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகு நிலையத்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது.
6. சிவகங்கை மாட்டம் திருப்புவனம் அருகே கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்துவிட்டதால் 16 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் ஆற்றை ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் கடந்து செல்கின்றனர்.
7. நெல்லை மாநகராட்சியிலுள்ள 5வது வார்டை பொது பிரிவு வார்டாக மாற்றக் கோரிய வழக்கில் நகராட்சி நிர்வாக முதன்மை செயலர் , நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
8. பெரியார் வைகை நீர் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை இரண்டு வாரத்தில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தவறும் பட்சத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடும் நீதிபதிகள் எச்சரிக்கை.
9. மோசடி புகாரில் சிக்கிய தலைமை காவலரின் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்தனர். மேலும் விசாரணை முதல் கட்டத்தில் இருப்பதால் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு.
10. ஜெய் பீம் படத்திற்கு ஆதரவாக பாம்பு, எலிகளுடன் போரட்டத்தில் குதித்த பழங்குடிய மக்கள் 21 பெண்கள் உட்பட 51 நபர்கள் மீது மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















