மேலும் அறிய

மதுரை : மூச்சுத்திணற திணற முட்டிமோதிய பிரியாணி பிரியர்கள் : ஐந்து பைசா பிரியாணி கடைக்கு சீல்..!

கொரோனா விதிமுறையை பின்பற்றாமல் செயல்பட்ட பிரியாணிக் கடைக்கு, மதுரை மாநகராட்சி அதிகாரி கடைக்கு சீல் வைத்தனர்.

மதுரை  செல்லூர் பகுதியில் 'தெற்குவாசல் சுகன்யா பிரியாணி'  என்று பெயரில்  பிரியாணி கடை என ஒரு கடை நேற்று திறக்கப்பட்டது. அது தொடர்பாக  செல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை திறப்பு விழா குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த போஸ்டரில் பழைய, செல்லாத ஐந்து பைசா நாணயத்தை கொண்டு வருபவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மதுரை : மூச்சுத்திணற திணற முட்டிமோதிய பிரியாணி பிரியர்கள் : ஐந்து பைசா பிரியாணி கடைக்கு சீல்..!
 
இதனை தொடர்ந்து நேற்று  திறப்பு விழா என்பதால் வீட்டிலிருந்த செல்லாத ஐந்து பைசா நாணயங்களை சேகரித்து மக்கள் செல்லூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். மதியவேளையில் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் 5 பைசா நாணயத்தை கையில் வைத்துக்கொண்டு பிரியாணி வாங்குவதற்கு கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சமூக இடைவெளி இன்றி முகக்கவசம் இல்லாமல் 5 பைசா நாணயத்தை கொண்டுவந்து பிரியாணி வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
மதுரை : மூச்சுத்திணற திணற முட்டிமோதிய பிரியாணி பிரியர்கள் : ஐந்து பைசா பிரியாணி கடைக்கு சீல்..!
இதனை தொடர்ந்து கடை உரிமையாளர்கள், அலைமோதிய மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பிரியாணி கடையின் இரும்புக் கதவை இழுத்து மூடினார்கள். தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்து கூட்ட நெரிசலை போக்குவதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, கூட்டமாக குவிந்து இருந்த மக்களை அப்பகுதியில் இருந்த அப்புறப்படுத்தினர்.

மதுரை : மூச்சுத்திணற திணற முட்டிமோதிய பிரியாணி பிரியர்கள் : ஐந்து பைசா பிரியாணி கடைக்கு சீல்..!
 
இந்நிலையில்  விளம்பரப்படுத்தும் நோக்கோடு 5 பைசாவுக்கு பிரியாணி விற்பனை செய்வதாக கூறி, உரிய கொரோனா விதிமுறைகளை  பின்பற்றாமல் பொதுமக்களுக்கு பிரியாணி விற்பனை செய்ததற்காக மதுரை மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். இது மட்டுமல்லாமல் உரிய விளக்கம் அளிக்க கோரி உரிமையாளருக்கு நோட்டீஸ் வாங்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள்  சிலர், “தங்களது புதிய கடை விளம்பரம் வேண்டும் என பல்வேறு இடங்களில் புதிய யுக்திகளை கையாள்கின்றனர். ஆனால் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் இப்படி கூட்டும் கூட்டுவது எந்த விதத்தில் நியாயம்? பிரியாணிக்காக மக்கள் எந்த அச்சமின்றி குவிந்தது கசப்பான உண்மை. எனவே பிரியாணிக் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Toyota Urban Cruiser BEV: தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
Poco M8 5G Review: சிம்ப்பிள், ஆனா செம்ம.. அன்றாட பயனர்களுக்கு அம்சமான போன்; போகோ M8 5G-ன் சிறப்புகள் என்ன.?
சிம்ப்பிள், ஆனா செம்ம.. அன்றாட பயனர்களுக்கு அம்சமான போன்; போகோ M8 5G-ன் சிறப்புகள் என்ன.?
Suzuki e-Access Vs Ather 450: சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
Embed widget