மேலும் அறிய

கோவில் பிடி மண்ணை எடுத்து வந்ததால் சாமி குத்தம் - இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்

கோவில் பிடி மண்ணை எடுத்து வந்ததால் சாமி குத்தம் ஏற்பட்டு தொழிலாளி இறந்ததாக கூறி மண் எடுத்து வர சென்னவரின் வீட்டில் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்.

வேடசந்தூர் அருகே கோவில் பிடி மண்ணை எடுத்து வந்ததால் சாமி குத்தம் ஏற்பட்டு தொழிலாளி இறந்ததாக கூறி மண் எடுத்து வர சொன்னவரின் வீட்டில் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Most 200+ score in IPL: ஐபிஎல்-லில் அதிக முறை 200 ரன்கள்.. அடுத்தடுத்து சாதனையை குவிக்கும் சிஎஸ்கே.. முழு பட்டியல் விவரம்!
கோவில் பிடி மண்ணை எடுத்து வந்ததால் சாமி குத்தம் - இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள பாலத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சக்திவேல்(வயது 33). சக்திவேலின் உறவினர் கருஞ்சின்னூரைச் சேர்ந்த முருகன். இவர் அய்யலூர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி ராஜமோகன் என்பவருடைய ஆதரவாளர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜமோகனின் தூண்டுதலின் பேரில் முருகன், சக்திவேலிடம் அய்யலூரில் உள்ள வண்டி கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வருமாறு கூறியதாக சொல்லப்படுகிறது.

Kalakshetra Row: கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் : ஓய்வுபெற்ற நீதிபதி, முன்னாள் டிஜிபி விசாரணை குழுவில் இடம்.. அறிவித்த கலாஷேத்ரா அறக்கட்டளை..!
கோவில் பிடி மண்ணை எடுத்து வந்ததால் சாமி குத்தம் - இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்

அதனைத்தொடர்ந்து சக்திவேல், வண்டி கருப்பணசாமி கோவிலில் இருந்து பிடி மண்ணை எடுத்து வந்து முருகனிடம் கொடுத்துள்ளார். அப்போது முதல் சக்திவேலுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சக்திவேலுக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி  நேற்று  உயிரிழந்தார்.

Influenza : சர்க்கரை நோயாளிகளுக்கு கூடுதல் அச்சுறுத்தல்: H3N2 இன்ஃப்ளூயன்ஸா வந்தால் இப்படியா? உஷார்

வண்டி கருப்பண சாமி கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்ததால் தெய்வ குத்தம் ஆகிவிட்டது, சாமி தண்டித்து விட்டது. அதனால் தான் சக்திவேல் உயிரிழந்தார் என்று கூறி அவரது உறவினர்கள் சக்திவேலின் உடலை எடுத்துச் சென்று கருஞ்சின்னானூரில் உள்ள முருகன் வீட்டின் முன்னால் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி, வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

கோவில் பிடி மண்ணை எடுத்து வந்ததால் சாமி குத்தம் - இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்

அப்போது கோவில் பிடிமனை எடுத்து வர சொல்லிய முருகன் மற்றும் ராஜமோகன், சம்பவம் இடத்திற்கு வர வேண்டும், மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை இறந்தவரின் உடலை எடுக்க மாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருமணம் மறுப்பு: மானாமதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது !
திருமணம் மறுப்பு: மானாமதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது !
சர்ச்சையாகும் போஸ்டர்... சிவகங்கையில் திமுகவிர் நிர்மல்குமார் குறித்து சுவரொட்டிகள்!
சர்ச்சையாகும் போஸ்டர்... சிவகங்கையில் திமுகவிர் நிர்மல்குமார் குறித்து சுவரொட்டிகள்!
இராமநாதபுரம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.51.5 கோடி திட்டம் மாவட்டத்திற்கு வளர்ச்சியை கொடுக்கும் !
இராமநாதபுரம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.51.5 கோடி திட்டம் மாவட்டத்திற்கு வளர்ச்சியை கொடுக்கும் !
லஞ்சப் புகார்: சிங்கம்புணரி ஆய்வாளர், தலைமைக் காவலர் அதிரடி பணியிடை நீக்கம்!
லஞ்சப் புகார்: சிங்கம்புணரி ஆய்வாளர், தலைமைக் காவலர் அதிரடி பணியிடை நீக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Embed widget