மேலும் அறிய

Kalakshetra Row: கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் : ஓய்வுபெற்ற நீதிபதி, முன்னாள் டிஜிபி விசாரணை குழுவில் இடம்.. அறிவித்த கலாஷேத்ரா அறக்கட்டளை..!

பேராசியர்கள் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா அறக்கட்டளை விசாரணைக்குழு அமைத்தது.

பேராசியர்கள் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா அறக்கட்டளை விசாரணைக்குழு அமைத்தது. ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்தாமான் இந்த குழுவில் உள்ளனர். 

3 பேராசிரியர்கள் டிஸ்மிஸ்:

மாணவிகளின் கோரிக்கையை ஏற்று எழுத்துப்பூர்வ அறிவிப்பை கலாஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாலியல் புகாரில் சிக்கி கைதான ஹரிபத்மன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கலாஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. மேலும், பேராசியர்கள் சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். 

கலாஷேத்ரா விவகாரம் என்னதான் நடந்தது?

சென்னையை அடுத்த திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணிதேவி கல்லூரி கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.  இந்த கல்லூரியானது மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி (autonomous) முறையில் செயல்படுகிறது. பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை சேர்ந்த பல முக்கிய கலைஞர்களை நம் நாட்டிற்கு வழங்கிய பெருமை இந்த நிறுவனத்திற்கு உண்டு என்று சொல்வார்கள். இதனால், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, கலாஷேத்ரா தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இங்கு பல பிரிவினைகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தது.

இந்தநிலையில், கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மீது ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். தொடக்கத்தில் இது வதந்தி என்று கூறப்பட்டு வந்தது. கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கிய கதாப்பாத்திங்களில் நடிக்க வேண்டுமானால், ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்து பேராசிரியர்கள் அத்துமீறியதாகவும், மிரட்டியதாகவும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மாணவிகளுக்கு தடை:

ஒருவருக்கு வாய்ப்பை வழங்குவதற்காக, மற்றவர்களின் திறமையை தடுக்கவும் இந்த பேராசிரியருக்கு கலாஷேத்ராவில் அதிகாரம் உள்ளதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது, மாணவிகள் கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரனிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பேராசிரியர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் கலாஷேத்ராவின் பெருமையைச் சீர்குலைக்கும் விதத்தில் பரப்பப்பட்டு வரும் கட்டுக்கதைகள் என்றும், இனி மாணவர்கள் இச்சம்பவம் குறித்துப் பேசவோ, இணையத்தில் கருத்துகள் பகிரவோ கூடாது என்றும் கலாஷேத்ரா நிர்வாகம் மாணவிகளுக்கு தடை விதித்ததாகவும் தகவல்கள் கிடைத்தன. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து, மாணவிகள் எந்த ஆசிரியருக்கு எதிராக புகார் அளித்தனரோ அந்த நபர், சர்வதேச மகளிர் தினத்தன்று கலாஷேத்ராவில் கவுரவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகுதான், இந்தியக் கலைஞர்களுக்காக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் 'கேர்ஸ்பேசஸ்' (c.a.r.e.spaces) எனும் அமைப்பின் மூலம் பல்வேறு மாணவிகள், கலாஷேத்ராவில் நடந்து வரும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

அதில் தற்போது பயின்று வருபவர்கள் மட்டுமின்றி, முன்னாள் மாணவர்கள் பலரும் பாலியல் புகார்களை முன்வைத்துள்ளதாக இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் பூகம்பமாக வெடித்தது. அந்த ஆதாரங்களை திரட்டிய 'கேர்ஸ்பேசஸ்' அமைப்பு, தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget