மேலும் அறிய
Advertisement
பெட்ரோல் குண்டு வீச்சு...கட்டாய தடுப்பூசி...கோயிலுக்குள் மழை நீர்...தென் மண்டலத்தில் இன்னும் பல!
சிங்கம்புணரி அருகே அடுத்தடுத்து 5 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1. தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமாக விளங்கும் சுருளி அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு சுருளி அருவிக்கு நீர் வரத்து வரும் மேகமலை வனப்பகுதிகளில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம்போல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா விதிமுறை கட்டுப்பாட்டில் சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏற்கனவே கடந்த ஒன்றரை ஆண்டாக தடை விதிக்கபப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2. போலி ஒப்பந்த ஆவணம் மூலம் நில மோசடி செய்ய முயன்றதாக ஆண்டிபட்டி மண்டல துணை தாசில்தார் மணவாளனை 56, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
3. "மதுரை மாவட்டத்தில் இரண்டு மெகா தடுப்பூசி முகாம் இருக்கிறோம். இதில் கட்டாயம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் வாரம் பொது இடங்களில் எச்சரிக்கை வழங்கப்படும். அடுத்த வாரம் கண்டிப்பாக அந்த அப்பகுதியில் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மதுக்கடையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்படும்.தடுப்பூசி செலுத்தியவர்கள் தனக்கு வந்த குறுந்தகவலை காட்டி பொது இடங்களுக்குச் செல்லலாம்" - மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் பேட்டி.
4. இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் 60 படகு களை மீட்பதில் தமிழ்நாடு அரசு பாராமுகம் காட்டுவதால் மீனவர்கள் தவிக்கின்றனர். தமிழக படகுகளை மீட்டுத்தர ராமநாதபுரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. நேற்று முன் தினம் இரவு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த கனமழையால் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் மழை நீர் புகுந்தது.
6. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அருணகிரி - வள்ளி தம்பதிக்கு சொந்தமான 11 ஆடுகள் திடீரென வாயில் நுரை தள்ளியபடி மர்ம நோயினால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல ஆடுகளுக்கு இந்த நோய் தாக்கி இருப்பதால் கால்நடை வளர்ப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
7. சிவகங்கை அருகே பாலம் இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.
8. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அடுத்தடுத்து 5 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
9. தமிழ்நாடு முதல்வரை தரக்குறைவாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முத்துராமன் தாக்கல் செய்த வழக்கை தீர்ப்புக்காக டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரைக்கிளை.
10. திண்டுக்கல் - குமுளி ரோட்டில் கடந்த ஆண்டு வாகனத்தில் 20 கிலோ கஞ்சா கடத்திய ராஜஸ்தானை சேர்ந்த உகன்சந்த் உமாபத்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion