டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வு பதிவெண் மற்றும் வினாத்தாள் குளறுபடி - தாமதமாக தொடங்கிய குருப் 2 தேர்வு வினாத்தாள்கள் ஏற்கனவே நிரப்பியிருந்ததால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் தேர்வை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தேர்வு என்ற பெயரில் குளறுபடி நடைபெறுவதாக கூறி அழுது தவித்த மாணவி.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய பிரிவுகளில், முதன்மைத் தேர்வினை மதுரை மாவட்டத்தில் 35 தேர்வு மையங்களில் 6750 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இந்நிலையில் வினாத்தாள் மற்றும் பதிவெண்கள் குளறுபடி காரணமாக காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வானது காலை 10.45 மணிக்கு தொடங்கியது. தமிழ் கட்டாய தகுதி தேர்வு விரித்துரைக்கும் வகையில் நடைபெறுகிறது. அதன் பின்னர் மதியம் 2 .45 மணி முதல் 5.45 மணி வரை பொது அறிவுக்கான தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில் மதுரை அவுட் போஸ்ட் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி தேர்வு மையத்தின் தேர்வு எழுத வந்தவர்களுக்கு காலை 9.30மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன அப்போது ஏராளமான தேர்வுகள் வினாத்தாள்களை பதிலை எழுத ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் வினாத்தாள்கள் மற்றும் பதிவெண் மாறி இருப்பதாக கூறி குழப்பம் ஏற்பட்ட நிலையில் தேர்வு நிறுத்தப்பட்டது. அப்பொழுது 45 நிமிடத்திற்கு மேலாக தாமதமான நிலையில் தேர்வர்கள் சிலர் வெளியில் வந்து புத்தகம் மற்றும் செல்போன்களை பார்த்து வினாக்கள்களை நிரப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிகாரிகள் நேரில் வந்து வினாத்தாள்களில் அவரவர்களிடம் கொடுக்கப்பட்ட வினாத்தாள்களில் அவர்களது பதிவு எண்களை எழுதிவிட்டு தேர்வை எழுதுமாறு அறிவுறுத்தினர்.
இதனையடுத்து காலை 10:45 மணிக்கு தேர்வு தொடங்கியது ஆனால் ஒரு சில தேர்வுகளுக்கு வந்திருந்த வினாத்தாள்களில் ஏற்கனவே பதிவு எண் தேர்வர்களின் கையெழுத்து மற்றும் வினாத்தாள்களுக்கான பதில்களும் நிரப்பப்பட்டு இருந்தன என சொல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் தேர்வை புறக்கணித்து வெளியில் வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கான வினாத்தாளில் ஏற்கனவே பதில் எழுதப்பட்டுள்ளதாகவும் அதே போன்று பதில் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதனை அடித்துவிட்டு மீண்டும் பதில் எழுதுமாறு அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் அப்படி எழுதினால் மைனஸ் மார்க் வந்துவிடும் இதேபோன்று 45 நிமிட தாமதத்தால் தேர்வர்கள் புத்தகத்தைப் பார்த்து வினாத்தாள்களை நிரப்பிவிட்டதாகவும் இதனால் இந்த தகுதி தேர்வு தங்களுடைய மதிப்பெண் குறைந்து வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என வேதனை தெரிவித்தனர். பல ஆண்டுகளாக படித்து காத்திருந்து எழுதிய தேர்வில் இதுபோன்ற குளறுபடிகளால் நாங்கள் தவித்து நிற்பதாகவும் இதற்கு யார் பதில் சொல்வார்கள் எனவும் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் நேரில் சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிய வினாத்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வுகளை எழுதத் தொடங்கினர். தாமதமாக தேர்வு எழுதிய 10 தேர்வர்களுக்கு மட்டும் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது இதே போன்று மதியம் பொது தேர்வுக்கான தேர்வு 2.45 மணிக்கு தொடங்கியது.
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றால் தங்களுக்கு அரசு பணி கிடைக்கும் என எதிர்பார்ப்போடு பல ஆண்டுகளாக படித்து தேர்வு எழுதி வரும் பட்டதாரிகள் இதுபோன்ற அதிகாரிகளின் தவறுகளால் தங்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகும் எனவும் இனிமேல் இதுபோன்ற காலி பணியிடங்களும் அறிவிப்புகளும் குரூப் 2-வில் வருவதற்கு நீண்ட ஆண்டுகள் ஆகும் எனவும் வேதனை தெரிவித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி சார்பில் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வு முடிவுபெற்றது. மதுரை மாவட்டத்தில் தேர்வுக்காக விண்ணப்பித்த 6718 தேர்வர்களில் காலையில் நடைபெற்ற குருப் 2 தேர்வினை 92 % பேர் 6200தேர்வர்களும், குருப் 2 ஏ தேர்வினை 94% பேர் 6319 தேர்வர்களும் தேர்வு எழுதியுள்ளனர்