சென்னை - நாகர்கோவில்: வாரம் மும்முறை வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை
குறிப்பிட்ட இந்த வந்தே பாரத் ரயில் களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்கும்

வந்தே பாரத் ரயில் சேவை
இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை இருந்து பெங்களூர் வழியாக மைசூர் என பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத்

