மேலும் அறிய

Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?

ICC T20 Wolrd Cup 2026 IND Vs NZ: விராட் கோலியால் முடியாமல் போனாலும் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்ததாக சூர்யகுமார் யாதவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ICC T20 Wolrd Cup 2026 IND Vs NZ: கேப்டனாக சூர்யகுமார் யாதவ் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தாலும், வீரராக சொதப்பியதாக விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.

கோலியால முடியல.. சூர்யகுமார் சம்பவம்..

இந்திய கிரிக்கெட் அணி எத்தனையோ சிறப்பான கேப்டன்களை கண்டிருந்தாலும்,  அவர்கள் அனைவராலும் ஐசிசி போட்டிகளில் கோப்பையை வெல்ல முடியவில்லை. கபில் தேவ், எம்எஸ் தோனி, ரோகித் சர்மா ஆகியோரால் மட்டுமே சர்வதேச போட்டிகளில் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடிந்தது. அந்த எலைட் லிஸ்டில் தற்போது சூர்யகுமார் யாதவும் இணைந்துள்ளார். அதேநேரம், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி போன்ற ஆகச்சிறந்த வீரர்கள் இந்திய அணி இன்று எட்டியுள்ள நிலைக்கு கேப்டனாக மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர். அவர்களால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது மிகப்பெரிய வருத்தமாக இருந்தாலும் வரலாற்றில் மறுக்க மற்றும் மறைக்க முடியாத லெஜண்டுகளாக தொடர்கின்றனர். அந்த அங்கீகாரம் சூர்யகுமாருக்கு கிடைக்குமா? என்றால் அது சந்தேகமே..!

ஸ்கை லெஜண்டாவது சந்தேகமே..!

ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த இந்திய கேப்டன்கள் அனைவருமே மிகவும் இக்கட்டான மற்றுமே வாய்ப்பே இல்லை என்ற சூழலில், அரிய நிகழ்வுகளை நடத்தி காட்டினர். பழையை தோல்விகளில் இருந்து கிடைத்த பாடங்கள் மூலம், இந்திய அணியின் ஒட்டுமொத்த அணுகுமுறையை மாற்றி சர்வதேச தரத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அத்தகைய பெரிய மாற்றம் எதையும் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி காணவில்லை. கபில்தேவ், தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பைகளை வென்றபோது, கேப்டனாக வழிநடத்தியது மட்டுமின்றி, வீரர்களாகவும் தங்களது பங்களிப்பை வழங்கினர். ஆனால், அத்தகைய நினைவுகூறத்தக்க பங்களிப்பு எதையுமே வழங்காமல், கேப்டனாக மட்டுமே சூர்யகுமார் வென்றுள்ளார். ஒட்டுமொத்தத்தில் அவரது தாக்கம் என்பது அணியில் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை.

இந்திய கேப்டன்களின் சம்பவம்..

  • இந்திய அணி 1983ம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது கேப்டனாக இருந்த கபில் தேவ், அந்த தொடரில் 303 ரன்களை குவித்து இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக வரலாறு படைத்தார். அதோடு, 8 போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். குறிப்பாக கட்டாயம் வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியில் 175 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்
  • 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது ஆரம்பத்தில் பேட்ஸ்மேன் ஆக சொதப்பினாலும், முக்கியமான இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடி 91 ரன்களை குவித்து பட்டத்தை வென்றது இன்று வரை தோனியின் மறக்கமுடியாத இன்னிங்ஸ் ஆக உள்ளது. அதேநேரம், விக்கெட் கீப்பர் என்ற முறையில் சிறந்த பங்களிப்பையும், கேப்டனாக அபாரமாக வழிகாட்டியும் அணியை வெற்றி பெற செய்தார்
  • 2007ம் ஆண்டு முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் களமிறங்கியபோது, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், கிடைத்த வீரர்களை திறம்பட கையாண்டு தோனி கோப்பையை வென்றது, ஒரு கேப்டன் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வரலாற்றை உருவாக்கினார். பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் பவுல் அவுட் முறையின்போது கீப்பராகவும் சரி, இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மாவை பந்துவீச செய்ததும் சரி, தோனி ஏன் லெஜண்டானார் என்பதற்கான சான்றுகளாக மாறிவிட்டன
  • கடந்த 2024ம் ஆண்டு இந்திய அணி தனது இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்ற போது, கேப்டனாக சக வீரர்களை அபாரமாக வழிநடத்தியதோடு, வீரராகவும் ரோகித் சர்மா முன்மாதிரியாக திகழ்ந்தார். 257 ரன்கள் விளாசி அந்த தொடரில் இந்தியா சார்பில் அதிக ரன் குவித்த வீரராக உருவெடுத்தார். குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக அரைசதம் விளாசி அசத்தினார்
  • 2023ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும், கேப்டனக தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றியை ஈட்டியதோடு, 597 ரன்களை விளாசி அந்த தொடரில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரராகவும் உருவெடுத்தார்.

இந்தியா வென்ற ஐசிசி உலகக் கோப்பைகள்

போட்டி கேப்டன் ஆண்டு எதிரணி
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கபில் தேவ் 1983 மேற்கிந்திய தீவுகள்
ஐசிசி டி20 உலகக் கோப்பை தோனி 2007 பாகிஸ்தான்
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தோனி 2011 இலங்கை
ஐசிசி டி20 உலகக் கோப்பை ரோகித் சர்மா 2024 தென்னாப்ரிக்கா
ஐசிசி டி20 உலகக் கோப்பை சூர்யகுமார் 2026 நியூசிலாந்து

ஸ்கேம் செய்த சூர்யா - கேப்டன் பதவி தப்புமா?

சூர்யகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, அவரது தலைமைத்துவ பண்பு மூலம் அணியின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக ரசிகர்களால் உணர முடியவில்லை. பெரிய அளவில் பேட்டிங்கை மட்டுமே நம்பி அணி களமிறங்குவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில், 9 போட்டிகளில் விளையாடி 242 ரன்களை மட்டுமே சேர்த்தார். அதில் 84 ரன்கள் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சேர்த்ததாகும். மற்றபடி ஒரு வீரராக குறிப்பாக இக்கட்டான சூழலில் அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையிலும், நினைவில் கொள்ளும் வகையிலும் எந்தவொரு பங்களிப்பையும் அவர் வழங்கவில்லை. இதே ஃபார்ம் தொடர்ந்தால் கேப்டன் பதவியை மட்டுமே கொண்டு, சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் தொடர்வாரா என்பது சந்தேகமே..

Frequently Asked Questions

2026 டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இந்திய வீரராக எப்படி செயல்பட்டார்?

சூர்யகுமார் யாதவ் கேப்டனாக டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தாலும், வீரராக அவர் சொதப்பியதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி கோப்பையை வென்ற கேப்டன்கள் யார்?

கபில் தேவ், எம்எஸ் தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கேப்டன்கள் ஆவர்.

கபில் தேவ், தோனி, ரோகித் சர்மா போன்ற கேப்டன்களின் சிறப்பம்சங்கள் என்ன?

இவர்கள் கோப்பைகளை வென்றது மட்டுமின்றி, வீரர்களாகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கி, அணியின் ஒட்டுமொத்த அணுகுமுறையையும் மாற்றினர்.

சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி பெரிய மாற்றங்களைக் கண்டதா?

இல்லை, சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி பெரிய மாற்ற எதையும் காணவில்லை என்று கூறப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ் 2026 டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்டபோது வீரராக அவரது பேட்டிங் எப்படி இருந்தது?

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில், 9 போட்டிகளில் விளையாடி 242 ரன்களை மட்டுமே சேர்த்தார். அதில் 84 ரன்கள் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியிலேயே அடங்கும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Embed widget