மேலும் அறிய

Gold Loan Waiver: நகைக்கடன் தள்ளுபடி..? எத்தனை சவரன்..? யாருக்கெல்லாம்.? போட்டி போட்டு ரெடியாகும் லிஸ்ட்

Gold Loan waiver : ஏழை எளிய மக்களுக்கு நகைக்கடன் பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது. அந்த வகையில் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா.? என காத்திருந்த நிலையில் கூட்டுறவு வங்கியில் எவ்வளவு நகைகடன் உள்ளது தொடர்பான பட்டியலை தமிழக அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழை மக்களுக்கு உதவிடும் தங்க நகைக்கடன்

தங்கத்தின் விலையானது ஒரு பக்கம் சரமாரியாக உயர்ந்து வந்தாலும், அவசர தேவைக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் அட்ஷய பாத்திரமாக தங்க நகைகள் உள்ளது. எனவே ஏழை எளிய மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை அருகில் உள்ள வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்து பணத்தை பெறுவார்கள்.ஒரு கட்டத்தில் தங்க நகைகளை திரும்ப பெறமுடியாத நிலைக்கும் செல்லும் நிலையும் ஏற்படும். எனவே அந்த நகைகளை வங்கி நிர்வாகம் ஏலம் விட்டு பணத்தை பெறுவார்கள். எனவே ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் கூட்டுறவு வங்களில் அடகு வைக்கப்படும் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பானது அரசால் வெளியிடப்படும்.

தங்க நகைக்கடன் தள்ளுபடி

அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழே நகை வைத்துள்ள கடன் தள்ளுபடி செய்யப்படுவாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, நகைகடன் தொடர்பான அறிவிப்பை செயல்படுத்த திட்டமிட்டது. அந்த வகையில், நகைக்கடன் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல வங்கிகளில் நகைக்கடனில் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. பல வங்கிகளில்  போலி நகைகள் வைக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்  நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.

4,900 கோடி தங்க நகைக்கடன் தள்ளுபடி

இதனையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற இடைக்கால பட்ஜெட்டில், கூட்டுறவுத் துறையின் மூலம் 12,359 கோடி ரூபாய் பயிர்க்கடனும், 4,889 கோடி ரூபாய் நகைக்கடனும் மற்றும் சுயஉதவிக் குழுக்களின் கடன் 2,118 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த ஐந்தாண்டு காலத்தில், 69.087 கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் எவ்வளவு நகைக்கடன் உள்ளது என்பது தொடர்பாக கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கூட்டுறவு வங்கியில் இருந்தும் நகைகடன் தொடர்பான பட்டியில் தமிழக அரசுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்டி போட்டு வாக்குறுதிகள்

இந்த சூழ்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே எதிர்கட்சியான அதிமுக போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும், கல்வி கடன் ரத்து, விவசாயிகளுக்கான கடன் ரத்து, 3 இலவச சிலிண்டர், முதியோர் ஓய்வூதியம் உயர்வு என அடுத்தடுத்து வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது. 

இதே போல இதற்கு போட்டியாக தவெகவும் அசத்தலான வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை 2500 ரூபாய், இலவச பேருந்து பயணம், வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசம், திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என மக்களிடம் ஆசையை காட்டி வருகிறது. தற்போது முதல் கட்ட வாக்குறுதிகளை தெரிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக வெளியிடப்படவுள்ள தேர்தல் வாக்குறுதியில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகைகடன் தள்ளுபடி அறிவிப்பு வருமா.?

அதிமுக, தவெகவிற்கு போட்டியாக ஆளுங்கட்சியான திமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்க தயாராகியுள்ளது. தமிழக மக்களை கவரும் வகையில் கவர்ச்சியான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த தேர்தலின் போது 5 சவரனுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு சுமார் 5ஆயிரம் கோடி அளவிற்கு நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே இந்த முறை குறைந்தது 2 சவரனுக்கு கீழ் கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைத்த விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த முறை தேர்தல் வாக்குறுதியின் போது ஒரு சவரன் 35ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது ஒரு சவரன் 1.30 லட்சத்தை தொட்டுள்ளது. எனவே தங்க நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு குறைவாக இருந்தாலும் ஆட்சியை கைப்பற்றும் வகையில் 2 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான  அறிவிப்பை வெளியிட ஆளுங்கட்சியான திமுக மட்டுமில்லாமல் அதிமுகவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Round Up: விஜய் பரப்புரை ரத்து, உயர்ந்த தங்கம் விலை, வேட்பாளர்கள் தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: விஜய் பரப்புரை ரத்து, உயர்ந்த தங்கம் விலை, வேட்பாளர்கள் தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
கும்பகோணம் - சென்னை பயணம்: புதுச்சேரி வழியாக புதிய 'ஷார்ட்கட்' ரூட் - முழு விவரம்!
கும்பகோணம் - சென்னை பயணம்: புதுச்சேரி வழியாக புதிய 'ஷார்ட்கட்' ரூட் - முழு விவரம்!
Kanimozhi MP ; பிஜேபியின் 850 சீட்டு கணக்கு... உடைத்துச் சொன்ன கனிமொழி!
Kanimozhi MP ; பிஜேபியின் 850 சீட்டு கணக்கு... உடைத்துச் சொன்ன கனிமொழி!
TN Election Campaign: பெரம்பூரில் வீடு வீடாக வாக்கு சேகரிக்க விஜய் திட்டம் - மோடி, ராகுல் - தலைவர்களின் இன்றைய பரப்புரை
TN Election Campaign: பெரம்பூரில் வீடு வீடாக வாக்கு சேகரிக்க விஜய் திட்டம் - மோடி, ராகுல் - தலைவர்களின் இன்றைய பரப்புரை
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD SILVER RATE: வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!
வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!
Russia Crude Oil: அப்பாடா.. நிம்மதி.! கச்சா எண்ணெய் இறக்குமதி; ட்ரம்ப் முக்கிய முடிவு; ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.!
அப்பாடா.. நிம்மதி.! கச்சா எண்ணெய் இறக்குமதி; ட்ரம்ப் முக்கிய முடிவு; ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.!
TN Election Campaign: பெரம்பூரில் வீடு வீடாக வாக்கு சேகரிக்க விஜய் திட்டம் - மோடி, ராகுல் - தலைவர்களின் இன்றைய பரப்புரை
TN Election Campaign: பெரம்பூரில் வீடு வீடாக வாக்கு சேகரிக்க விஜய் திட்டம் - மோடி, ராகுல் - தலைவர்களின் இன்றைய பரப்புரை
CSK Vs SRH: ஈகோ க்ளாஷில் சிஎஸ்கே..! இல்லாத பவுலர்கள், தோனிக்காக ஐதராபாத்தை பழிவாங்குமா ருதுராஜ் & கோ?
CSK Vs SRH: ஈகோ க்ளாஷில் சிஎஸ்கே..! இல்லாத பவுலர்கள், தோனிக்காக ஐதராபாத்தை பழிவாங்குமா ருதுராஜ் & கோ?
Renault Duster Iconic: டஸ்டரின் ஐகானிக் எடிஷன் - ரூ.18.69 லட்சத்து ரெனால்ட் என்னத்த கொடுக்குறாங்க..! SUV வொர்த்தா?
Renault Duster Iconic: டஸ்டரின் ஐகானிக் எடிஷன் - ரூ.18.69 லட்சத்து ரெனால்ட் என்னத்த கொடுக்குறாங்க..! SUV வொர்த்தா?
Trump Vs Ghalibaf: “அவர் சென்னது எல்லாமே பொய்“; ட்ரம்ப்பை கிழித்து தொங்கவிட்ட ஈரான் சபாநாயகர்; பாய்ண்ட் பாய்ண்ட்டாக பதிவு
“அவர் சென்னது எல்லாமே பொய்“; ட்ரம்ப்பை கிழித்து தொங்கவிட்ட ஈரான் சபாநாயகர்; பாய்ண்ட் பாய்ண்ட்டாக பதிவு
USA Iran War: ”ட்ரம்ப் சொன்ன மாதிரி நாங்க எதையும் தூக்கி கொடுக்கல.. பொய்யா பேசிக்கிட்டு” ஈரான் திட்டவட்டம்
USA Iran War: ”ட்ரம்ப் சொன்ன மாதிரி நாங்க எதையும் தூக்கி கொடுக்கல.. பொய்யா பேசிக்கிட்டு” ஈரான் திட்டவட்டம்
Bengaluru Traffic: பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் - ரு.13,262 கோடியில் 11 மேம்பாலங்கள், எங்கெங்கு?
Bengaluru Traffic: பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் - ரு.13,262 கோடியில் 11 மேம்பாலங்கள், எங்கெங்கு?
Embed widget