மேலும் அறிய
Advertisement
கைது செய்யப்பட்ட யூ டியூபர் மணீஷ் காஷ்யப்பிற்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க மறுப்பு !
"முதல் வகுப்பு வழங்க சட்டத்தின் இடமில்லை தேசிய பாதுகாப்பு சட்டம் தடுப்பு காவல் கைதியாக அடைக்கப்பட்டுள்ளதால் இவருக்கு முதல் வகுப்பு முடியாது" என எதிர்ப்பை தெரிவித்தார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவதில் மூல காரணமாக செயல்பட்ட மணிஷ் காஷ்யப் மீது தமிழ்நாட்டில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பியது மட்டுமின்றி ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மணிஷ் காஷ்யப் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் பல்வேறு கட்ட விசாரணையில் மதுரை காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திரிபுராரி குமார் திவாரி (எ) மணீஷ் காஷ்யப்பை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சூழலில் டெல்லியை சேர்ந்த திரிபுவன் குமார் திவாரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என்னுடைய சகோதரர் மணீஷ் காஷ்யப் பீகாரை சேர்ந்த பிரபல யூடியூபர். இவர் 2018 ஆம் ஆண்டு "Sach Tak News Channel" என்ற யூடியூப் பக்கத்தை உருவாக்கி பீகார் மக்களின் குறைகளையும், ஊழல்களையும் வீடியோவாக பதிவு செய்து யூடியூப் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இதுபோன்ற செயல்பாடுகளினால் சமூக வலைதளத்தில் மிகப் பிரபலமான நபராக மாறினார். 2020 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் சன்பதியாவில் போட்டியிட்டு 9239 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தார். மணீஷ் காஷ்யப் சிவில் இன்ஜினியர் 2023 ஆம் ஆண்டு வரை முறையாக வருமான வரி செலுத்தி வருகிறார். இந்த நிலையில் மணீஷ் காஷ்யப் பீகார் தொழிலாளிகள் தமிழ்நாட்டில் தாக்குவது போன்ற வீடியோ வெளியிட்ட வழக்கில் முதலில் பீகார் காவல்துறையினர் கைது செய்தனர். பின் மதுரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மதுரை காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எனது சகோதரர் மணீஷ் காஷ்யப் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மணீஷ் காஷ்யப் மார்ச் 30, 2023ல் கைது செய்யப்பட்டார். 4 மாதங்களாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இடையில் மதுரை மத்திய சிறையில் அவரை சந்தித்தபோது தமிழ் மொழி தெரியாது என்பதால் இங்கு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக என்னிடம் தெரிவித்தார். மேலும் சிறு வயதில் இருந்து மணீஷ் காஷ்யப் புகை பிடிக்கும் பழக்கம் இல்லை சிறையில் உள்ளவர்கள் தொடர்ந்து புகை பிடித்ததால் மனதளவிலும் உடலளவிலும் பிரச்னை ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும் எனது சகோதரர் மணீஷ் காஷ்யப் சிறையில் "A" வகுப்பு வழங்க வேண்டும் என மனுசெய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, நான் சிறை துறைக்கு அனுப்பிய மனுவை பரிசீலனை செய்து மணீஷ் காஷ்யப் மதுரை மத்திய சிறையில் "A" வகுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிகுமார் ஆஜராகி முதல் வகுப்பு வழங்க சட்டத்தின் இடமில்லை தேசிய பாதுகாப்பு சட்டம் தடுப்பு காவல் கைதியாக அடைக்கப்பட்டுள்ளதால் இவருக்கு முதல் வகுப்பு முடியாது என எதிர்ப்பை தெரிவித்தார். மேலும் , மனுதாரரின் சிறையில் "A" வகுப்பு வேண்டிய மனு பரிசீலனை செய்து நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள்,மணீஷ் காஷ்யப் மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. மேலும் அரசு தரப்பில் மனு பரிசீலனை செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து மனுதாரர் தரப்பில், மனுவை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion