Ramzan : மதுரையில் பல்வேறு பகுதிகளில் மகிழ்ச்சியுடன் நடைபெற்றது இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..
பெருநாள் தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் ஒருவொருக்கொருவர் கைகொடுத்தும், ஆரத்தழுவியும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாத நோன்பாகும். அதனடிப்படையில் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பினை கடைபிடிப்பார்கள். ரமலான் மாதம் முதல்நாள் தொடங்கி தொடர்ச்சியாக 30 நாட்களும் நோன்பினை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் மற்றொரு கடமையான ஏழை எளியோருக்கு ஜகாத் என்னும் உதவிகளை வழங்கிவருவார்கள். ரமலான் 30நோன்பு முடிவடைந்த பின்னர் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவர். இதற்காக அதிகாலையில் தொழுகை முடித்த பின்னர் புத்தாடை அணிந்து ஈதுல் பித்ர் என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் கலந்துகொள்வர்.
#madurai | ரமலான் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது - ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பலரும் தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
— arunchinna (@arunreporter92) April 22, 2023
|#ரமலான் | #madurai | #தொழுகை | @SRajaJourno | @LPRABHAKARANPR3 | pic.twitter.com/dpgz0dpNov
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்