Morning Headlines: 5ம் கட்ட வாக்குப்பதிவு - ஓயும் பரப்புரை; அரவணை பாயாச டின்களை அழிக்க உத்தரவு.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines May 18: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தலைப்புச் செய்திகளின் தொகுப்பாக காணலாம். முக்கியமான 5 செய்திகளின் லிங்க்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- ஹரியானாவில் பக்தர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு..!
ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பக்தர்கள் உடல் கருதி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் சண்டிகரை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஹரியானா சென்ற 60 சுற்றுலா பயணிகள் கொண்ட சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது. எதிர்பாராத இந்த பேருந்து தீப்பிடித்ததில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு நல்ஹாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- 5ம் கட்ட வாக்குப்பதிவு - இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை; 49 தொகுதிகளை முற்றுகையிடும் தலைவர்கள்
நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்டத்தில், 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதனால், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முறையே 66.14 சதவீதம், 66.71 சதவீதம் மற்றும் 65.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. நான்காம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 64 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
- வீட்டில் இருந்து விரட்டப்பட்டாரா மோடி? தீயாய் பரவும் செய்தி உண்மையா?
சமீபத்தில், செய்தி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. Amar Ujala செய்தி நிறுவனத்தின் துண்டு செய்தியில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி பேசியதாக சில தகவல்கள் மேற்கொள் காட்டப்பட்டிருந்தது. அதில், "துறவியாவதற்காக அவர் வீட்டில் இருந்து வெளியேறவில்லை. நகைகளை திருடியதற்காக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்தான் நரேந்திர மோடி" என மோடியின் சகோதரர் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தியானது உண்மையானதா என்பதை கண்டறிய நம்முடைய எண்ணுக்கு 9049053770 அனுப்பப்பட்டது.
- கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!