Top 10 News Headlines: விசா விதிகளில் மாற்றம்? மருத்துவமனையில் இசைப்புயல் - டாப் 10 செய்திகள்
Top 10 News: காலை முதல் தற்போது வரை இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

விசாவில் புதிய மாற்றம்:
41 நாடுகரைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல தடை விதிக்கும் வகையில் விசா கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அந்நாட்டு அரசுபாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி |இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது. ஆப்கானிஸ்தான், பூடான், க்யூபா, வடகொரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன், சிரியா உள்ளிட்ட நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஏ.ஆர் ரகுமான் மருத்துவமனையில் அனுமதி:
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கேபிள் கேலரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மின்சார ஒயர்கள் எரிந்ததால், 3 யூனிட்களில் மின்சார உற்பத்தி நிறுத்தம். சுமார் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை தீயை அணைக்கும் பணி நடந்துவருகிறது.
இலங்கை செல்லும் பிரதமர் மோடி:
அடுத்த மாதம் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி. திரிகோணமலை அருகே அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். அதிபர் அனுர குமார திசநாயக, பிரதமர் ஹரிணி அமரசூரியா உள்ளிட்டோரை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்
முதல் நலம் விசாரிப்பு:
ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன்; அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி! என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
டயரில் பயணம்:
ஆந்திரா மாநிலத்தில் மதுபோதையில் சுமார் 15 கி.மீ தூரம் அரசுப் பேருந்திற்கு கீழ் உள்ள ஸ்டெப்னி டயரின் இடுக்கில் தொங்கியபடி பயணித்த நபரால் பரபரப்பு! பின்னால் வந்த வாகன ஓட்டிகள் எச்சரித்ததை அடுத்த பேருந்தை உடனடியாக நிறுத்தி அவரை மீட்டனர்.
உ.பியில் பரபரப்பு:
உடல் நலக்குறைவால் அழுதுக்கொண்டே இருந்த 6 மாத கைக்குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக, மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற பெற்றோர். மந்திரவாதி குழந்தைக்கு ஆவிப்பிடித்ததாக கூறி தீயை மூட்டி, குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டதால் கண்பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!வெப்பம் தாங்காமல் அவறிய குழந்தை மருத்துவமனையில் அனுமதி, கண்பார்வை முழுமைாக இழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மழைக்கு வாய்ப்பு:
இன்று (மார்ச்.16) பிற்பகல் ஒரு மணி வரை திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
சச்சின் லாரா மோதல்:
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் இன்று மோதல். இன்று இரவு ராய்பூரில் நடைபெறும் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் - பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் விளையாடுகின்றனர்.
மும்பை அணி சாம்பியன்:
2வது முறையாக WPL கோப்பையை தட்டிச் சென்றது மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி!இறுதிப்போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபாரம். அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 66 ரன்கள் குவித்தார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

