(Source: ECI/ABP News/ABP Majha)
Headlines Today Tamil | சென்னை வங்கி அதிகாரி தற்கொலை முதல், பள்ளி, கல்லூரி மூடல் வரை... இன்னும் பல செய்திகள்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற, பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
தமிழ்நாட்டில் நேற்று 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை அதிமுக வலியுறுத்தியுள்ளது.
தமிழக தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை.. ஆன்லைன் விளையாட்டு காரணமா?
இந்தியா:
கொரோனா அச்சம் காரணமாக மேற்கு வங்கத்தில் இன்று முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்படுகின்றன.
கொரோனா தொற்று அதிகரித்தாலும் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாமென்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் 2 வாரங்களுக்கு வழக்கு விசாரணைகள் காணொலி வாயிலாக நடக்கவிருக்கின்றன.
15-18 வயதுவரையிலான சிறுவர், சிறுமியருக்கு இன்று முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக 6.35 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்
உலகம்:
இஸ்ரேலில் ஃப்ளோரினா எனும் இரட்டை உருமாற்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 2022ல் கொரோனா தொற்று ஒழிந்துவிடும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்காவை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென ஈரான் வலியுறுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா நாட்டின் பாராளுமன்ற கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
விளையாட்டு:
அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
குயிண்டன் டீகாக்கின் ஓய்வு தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங்கை மேலும் மோசமாக்கும் என ஹாசிம் அம்லா கூறியுள்ளார்.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Sunny Leone Interview : துன்புறுத்திய கேள்விகள்.. யாருமே எனக்காக பேசவில்லை.. சன்னி லியோன் பகிர்ந்த கதை..