News Today Live: இன்று மதியம் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி - நவ்ஜோத் சிங் சித்து
News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

Background
#BREAKING | அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமா...
மதியம் 3 மணிக்கு பஞ்சாப் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் சித்து.
Chief Minister has invited me for talks … will reciprocate by reaching Punjab Bhawan, Chandigarh at 3:00 PM today, he is welcome for any discussions !
— Navjot Singh Sidhu (@sherryontopp) September 30, 2021
மதியம் 3 மணிக்கு பஞ்சாப் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் சித்து.
முதல்வர் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அதற்கு, மதிப்பளிக்கும் வகையில் மதியம் 3 மணிக்கு அவரை நேரில் சந்திக்க இருக்கிறேன்.
கேரளாவில் 91.9% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
கேரளாவில் 18 வயதிற்கு மேற்பட்ட 91.9% பேருக்கு கொரோனா பெருந்தொற்றுக்கான முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார் கேப்டன் அமரீந்தர் சிங்
டெல்லியில் முகாமிட்டிருக்கும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் இன்று பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார்.
முன்னதாக, நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். காங்கிரஸ் தலைமையின் உத்தரவின் பேரில் இரண்டு வாரத்துக்கு முன்பு அம்ரிந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கத்து.
Ayushman Bharat Digital Mission: பில் கேட்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோதி நன்றி
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்திற்கு பாராட்டு தெரிவித்த பில் கேட்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோதி நன்றி தெரிவித்துள்ளார்.
India Covid-19 Case Updates: கடந்த 24 மணி நேரத்தில் 23,529 புதிய தொற்று பாதிப்புகள் காணப்படுகின்றன
கடந்த 24 மணி நேரத்தில் 23,529 புதிய தொற்று பாதிப்புகள் காணப்படுகின்றன, 28,178 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,30,14,898 பேர் குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் தற்போது 97.85%. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,77,020 ஆகும்.

