Breaking News LIVE: பெண்கள் வீட்டில் இருந்தே பணிபுரியும் திட்டத்தை அறிவித்தார் ராஜஸ்தான் மாநில முதல்வர்
Breaking News LIVE Today Tamil, 21 Dec: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய விவகாரங்களை கீழே லைவ் ப்ளாக்கில் அடுத்தடுத்து விரிவாக காணலாம்.
LIVE
Background
உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே 3 கட்டங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று உத்தரபிரதேசத்தில் உள்ள 9 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த 59 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் தொகுதி அடங்கிய ரேபரேலி மாவட்டமும், நாட்டைய உலுக்கிய 4 விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட லக்கிம்பூர்கேரி மாவட்டமும் அடங்கும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 59 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் 624 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பெண்கள் வீட்டில் இருந்தே பணிபுரியும் திட்டத்தை அறிவித்தார் ராஜஸ்தான் மாநில முதல்வர்
பெண்கள் வீட்டில் இருந்தே பணிபுரியும் திட்டத்தை அறிவித்தார் ராஜஸ்தான் மாநில முதல்வர். 20,000 பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடயப்போவதாகவும், இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 29 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்று 618 பேருக்கு உறுதியானது தொற்று பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு...
தமிழ்நாட்டில் இன்று 618 பேருக்கு உறுதியானது தொற்று பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு...
தமிழ்நாட்டில் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு..!
தமிழ்நாட்டில் 618 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகளிர் வார்டு ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு தள்ளுபடி
சென்னை மாநகராட்சி தேர்தலில் மகளிருக்கு வார்டு ஒதுக்கீடு செய்த உத்தரவை எதிர்த்து முத்துராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.