News Today LIVE: இரண்டு அடுக்காக அமையும் மதுரவாயல் சாலை
News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
LIVE
Background
Today News in Tamil LIVE:
பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியிலும் மோதல் போக்கு காணப்படுகிறது. இருப்பினும், மூத்த காங்கிரஸ் தலைவரும், அம்மாநிலத்தின் முதல்வருமான அசோக் கெலாட்-க்கு 100க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பஞ்சாப் முதலமைச்சராக பதவி வகித்து வந்த அமரீந்தர் சிங் அண்மையில் பதவி விலகியதைத் தொடர்ந்து சரண்ஜீத் சிங் சன்னி புதிய முதலமைச்சராக பதவியேற்றார். புதிதாக 15 பேர் அமைச்சர்களாக கடந்த ஞாயிற்றுக் கிழமை பதவியேற்றனர். இந்நிலையில் அவர்களுக்கான இலாக பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சித்து ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப்-ல் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், ராஜஸ்தானிலும் எதிரொலிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இரண்டு அடுக்காக அமையும் மதுரவாயல் சாலை
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை முதன்முறையாக இரண்டு அடுக்காக அமையவுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை 3 மாதங்களில் நிறைவடையும். எந்த இடத்தில் அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். முதல் தளத்தில் வாகனங்கள், இரண்டாம் தளத்தில் கண்டெய்னர் செல்லும் வகையில் சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதாவைப்போல முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவது வரவேற்கத்தக்கது - செல்லூர் ராஜு
#JUSTIN | ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதாவை போல முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவது வரவேற்கத்தக்கது
— ABP Nadu (@abpnadu) September 29, 2021
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூhttps://t.co/wupaoCQKa2 | #SelluRaju | #AIADMK | #DMK | #MKStalin
ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதாவை போல மு.க ஸ்டாலின் செயல்படுகிறார் - செல்லூர் ராஜூ
ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதாவை போல முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவது வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
BREAKING: ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 2 பேர் குற்றவாளி - நீதிமன்றம்
ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 2 பேர் குற்றவாளி; தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் - சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்திரகுமாரி 1991-96 வரை சமூக நல அமைச்சராக இருந்தபோது ரூ.15.45 லட்சம் ஊழல் செய்ததாக புகார்
Weather Update Today: கடலோர மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.