Breaking Live : குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Background
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா
குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மாநில ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார். அடுத்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி, ஆனந்தி பென் படேலுக்குப் பிறகு முதல்வரானவர். கடந்த 2016 முதல் குஜராத் முதலமைச்சராக இருந்தா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19க்கான தடுப்பூசிகளின் எண்ணிக்கை 73 கோடியை எட்டியது
நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கோவிட்-19க்கான தடுப்பூசிகளின் எண்ணிக்கை 73 கோடியை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள கோவிட்-19 தடுப்பூசி முகாம் குறித்த விவரங்கள்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன்
தமிழ்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ரவியை குடியரசுத் தலைவர் திரும்ப பெற வேண்டும். உளவுத்துறையில் பணியாற்றவரை ஆளுநராக நியமித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்

