Covaxin-க்கு விலை நிர்ணயித்தது பாரத் பயோடெக்.. மாநில அரசுக்கு ரூ.600.. தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியான Covaxin-க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் Covaxin மற்றும் Covishield என இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதனிடையே Covishield விலையை 2 மடங்கு உயர்த்தி அறிவித்தது சீரம் நிறுவனம். அதன்படி அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் 600 ரூபாய்க்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50 சதவீதம் தடுப்பூசிகள் மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சினின் விலை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மாநில அரசுகளுக்கு ஒரு டோஸின் விலை 600 ரூபாய் என்றும், தனியாருக்கு ஒரு டோஸின் விலை 1,200 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியில் 50 சதவீதம் மத்திய அரசுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். கேரளா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்துள்ளது.