(Source: ECI/ABP News/ABP Majha)
Mother Teresa Charity: அன்னை தெரசா அறக்கட்டளை வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன - மம்தா பேனர்ஜி
கிறித்தவ பெரு நாளன்று, மத்திய அமைச்சகம், அன்னை தெரசா நிறுவிய 'மிஷினரீஸ் ஆஃப் சேரிட்டி' என்ற அறக்கட்டளையின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது - மம்தா பேனர்ஜி
அன்னை தெரசா அறக்கட்டளையின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட அதிர்ச்சியளிப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
Shocked to hear that on Christmas, Union Ministry FROZE ALL BANK ACCOUNTS of Mother Teresa’s Missionaries of Charity in India!
— Mamata Banerjee (@MamataOfficial) December 27, 2021
Their 22,000 patients & employees have been left without food & medicines.
While the law is paramount, humanitarian efforts must not be compromised.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில் கூறியிருப்பதாவது;
"கிறித்தவ பெருநாளன்று, மத்திய அமைச்சகம், அன்னை தெரசா நிறுவிய 'மிஷினரீஸ் ஆஃப் சேரிட்டி' என்ற அறக்கட்டளையின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. 22000 நோயாளிகள், ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகளின்றி தவித்து வருகின்றனர். சட்டம் முதன்மையானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளில் சமரசம் செய்யக்கூடாது" என்று பதிவிட்டார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை, " ஏழை மக்களுக்கு அளிக்கப்பட்ட மிகக் கொடூரமான கிறித்தவத் தின அன்பளிப்பு என அன்னை தெரசா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், " இந்த நடவடிக்கையின் மூலம் அறக்கட்டளை பணியாளர்கள், பயனாளிகள் உட்பட 22,000 பேர் பாதுப்புக்கு உள்ளார்வர்கள்.
ஏழைஎளியோர்களுக்கும், யாரும் அருகில் கூட செல்ல தயங்கும் தொழு நோயாளிகளுக்கும் அறக்கட்டளையின் சகோதர, சகோதரிகள் தொண்டாற்றி வருகின்றனர். கிறிஸ்துவ சமயச்சார்பான குழுக்கள் மீதான சமீபத்தியத் தாக்குதல்கள் பரம ஏழை எளிய மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையாகும். கிறிஸ்த்துவ தேவாலயங்கள் திட்டமிட்டு மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி மேற்கொள்ளப்படும் செயல்களை நியாயப்படுத்த முடியாது. இத்தகைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை " என்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கொல்கத்தாவில், 10 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையே கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களைக் கவனிக்கும் இடமாகவும் இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
கட்டுரையை, ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்