Breaking News LIVE : நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
LIVE

Background
Breaking News LIVE : நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 மணி நேர வேலை: 24ம் தேதி தொழிற்சங்கங்களுடன் அரசு ஆலோசனை
12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக முக்கிய தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளது. தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் சி.வி. கணேசன் உள்ளிட்டோர், தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்த உள்ளனர். மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் திங்களன்று மதியம் 3 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது.
Breaking News LIVE : 1,541 சிலைகளை மக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை
1,541 சிலைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார்.
Breaking News LIVE : பாட்னா உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு
பீகார் மாநிலம் பாட்னா நீதிமன்றம் அனுப்பிய சம்மனை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு - போலீசில் புகார்
திருச்சியில் நாளை மறுநாள் ஓபிஎஸ் சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில், அதிமுகவின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் குமார் மற்றும் பரஞ்சோதி ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

