Breaking News LIVE: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - மேலிட பார்வையாளர்கள் நியமனம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
LIVE

Background
போதை பொருள் கடத்தல் தடுப்பு - ரோந்து அதிகரிப்பு
தமிழகத்திற்குள் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதை தடுக்க கடலோர காவல் குழுமத்தின் ரோந்து அதிகரிக்கப்படும் - காவல்துறை தலைமை இயக்குநர்
கள்ளச்சாராயம் - உயிரிழப்பு 6 ஆக உயர்வு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னாங்கட்டி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடக்கம்..!
கர்நாடக முதலமைச்சரை தேர்வு செய்ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது.
Breaking News LIVE : பிரதமர் மோடியுடன் வால்மர்ட் நிறுவன சிஇஓ சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியுடன் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டக் மெக்மில்லன் சந்தித்தார்.
Breaking News LIVE:28 வயதுப் பெண் கொலையான வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம்
நாமக்கல் அருகே ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதுப் பெண் கொலையான வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

