Breaking News LIVE: வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவிப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
LIVE

Background
Breaking News LIVE : ஏற்காடு நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து தந்தை, மகள் பலி
சேலம் ஏற்காடு நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த தந்தை, மகள் உயிரிழப்பு; நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் இருந்த பாறைகள் மீது ஏற முயன்ற போது தவறி விழுந்து உயிரிழந்தனர்.
Breaking News LIVE: கோவை- சேலம் பாசஞ்சர் ரயில் - 16-ஆம் தேதி வரை ரத்து!
கோயம்புத்தூர் - இருகூர் இடையே தண்டவாள பணி, தொழில்நுட்ப பணிகள் காரணமாக பாசஞ்சர் ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரித்துள்ளது.
Breaking News LIVE: வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவிப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய்க்கிழமை தோறும் சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவானது செயல்படாது. இந்த நிலையில் மே ஒன்றாம் தேதி மற்றும் சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் தொடர் விடுமுறை என்பதாலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியிருப்பதாலும் அதிக அளவு பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நாளை பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது
Breaking News LIVE: தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டுகள் நிறைவு- சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்!
தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 7, 8, 9 ஆகிய நாட்களில் “திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்" நடைபெறும்.
திமுக கட்சி சார்பில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE: சித்திரை திருவிழா- தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்!
கழுகுப்பார்வையில் தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தேரோட்டம்!https://t.co/wupaoCzH82 | #Thanjavur #ChithiraiTherottam #tamilnadu pic.twitter.com/CIdWwx211D
— ABP Nadu (@abpnadu) May 1, 2023
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

