Breaking News LIVE: முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு
-Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
LIVE

Background
CM Delhi : முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு
CM Delhi : முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, டெல்லி பயணத்தை ஒத்திவைத்து வீடு திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE : புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை பெண் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைப்பு
புதுச்சேரியில் மாநில அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Breaking News LIVE: நடிகர் விஜய் சந்திப்பு குறித்து நடிகர் விஷால் நெகிழ்ச்சி ட்வீட்
நடிகர் விஜய் சந்திப்பு குறித்து நடிகர் விஷால் நெகிழ்ச்சி ட்வீட்https://t.co/wupaoCzH82 | #Vijay #MarkAntonyTeaser #Vishal @VishalKOfficial @actorvijay pic.twitter.com/L9k0ef8RTi
— ABP Nadu (@abpnadu) April 27, 2023
Breaking News LIVE: TN Rain Alert: ஏப்ரல் 30, மே 1 மழை இருக்கு!
வரும் 30 ஆம் தேதி 8 மாவட்டங்களிலும் மே 1 ஆம் தேதி 10 மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 30 ஆம் தேதி மற்றும் மே 1 ஆம் தேதி நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE: எஞ்சிய போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் இல்லை! -
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வாஷிங்டன் சுந்தர் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்று சன்ரைசர்ஸ் அணி தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

