Breaking News LIVE: புதுச்சேரி - விஷவாயு தாக்கி 3 பேர் பலி: பொதுமக்கள் சாலை மறியல்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE

Background
புதுச்சேரி: விஷவாயு தாக்கி 3 பேர் பலி
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் அப்பகுதி மக்கள் உரிய விசாரணை நடத்தக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு புதுச்சேரி விழுப்புரம் இடையே நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி
2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. என் மகன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் அவரை மன்னிக்க மாட்டேன் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் உள்ள அதிபரின் மகன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு குற்றவாளி என தீர்ப்பு வந்தது இதுவே முதல்முறை.
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் ஹண்டர் பைடனுக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
Breaking News LIVE: இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது - கட்சியிலிருந்தும் நீக்கம்
பாஜக தமிழகத்தில் வளர கலவரம் செய்ய வேண்டும் என பேசிய இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் பாளையங்கோட்டை போலீசாரால் கைது. மத ரீதியான பிரச்சனையை தூண்டியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Breaking News LIVE: கன்னட நடிகர் தர்ஷனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
காதலி குறித்து ஆபாசமாக பதிவு செய்த இளைஞரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் தர்ஷன், கன்னட நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 13 பேரை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உங்கள் அன்புக்கு நன்றி; மோடியின் குடும்பம் என்ற டேக்கை நீங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
இந்திய மக்கள் பாசத்தின் அடையாளமாக தங்களது சமூக ஊடகங்களில் வைத்துள்ள மோடியின் குடும்பம் என்ற பெயரை நீக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்'(மோடியின் குடும்பம்) என பதிவிடுகின்றனர். எனக்கு அதன் மூலம் உத்வேகம் கிடைத்துள்ளது. இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர், இது ஒரு வகையான சாதனை. மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.
நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடகங்களில் இருந்து 'மோடி கா பரிவார்' என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காட்சிப் பெயர் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு பரிவார் என்ற நமது பந்தம் வலுவாகவும் உடைக்கப்படாமலும் உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

