Abp C Voter Gujarat Exclusive : 4 பிராந்தியங்களில் பாஜக, காங்கிரஸ், ஏஏபி பலம் என்ன?
குஜராத்தில் தேர்தல் களம் சூடு கண்டுள்ளது. பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் வாக்காளர்களைக் கவரும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.

குஜராத்தில் தேர்தல் களம் சூடு கண்டுள்ளது. பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் வாக்காளர்களைக் கவரும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 8ஆம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதனால் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டன. ABP News-CVoter இணைந்து குஜராத் மக்களின் தற்போதைய மனநிலையை கணித்துள்ளது. அதன்படி ஒட்டுமொத்த அலசலைக் கொண்டு பார்க்கும்போது குஜராத்தில் பாஜக லகுவாக ஆட்சியை தக்கவைக்கும் சூழலே உள்ளது. வாக்குவங்கியைப் பொறுத்த வரை காங்கிரஸ் கடந்த தேர்தலைவிட குறைவாகவும், ஆம் ஆத்மி சற்றே அதிகமாகவும் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதனைப் புரிந்து கொள்ள குஜராத்தில் பிராந்திய வாரியாக நிலவரம் என்னவென்பதை ABP News-CVoter கணக்கிட்டுள்ளது.
அதன்படி மத்திய குஜராத்தில், பாஜகவே வாக்குவீதம் அடிப்படையில் முன்னணியில் இருக்கும். அங்கு பாஜகவுக்கு 46 முதல் 50 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸுக்கு மத்திய குஜராத்தில் வாக்கு பங்கும் சரி, கிடைக்கக் கூடிய இடங்களும் சரி குறைவாகவே இருக்கும். ஆம் ஆத்மி நிலவரத்தை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.
வடக்கு குஜராத்தில் பாஜக தனது முந்தைய பலத்தை இழக்கக் கூடும். அது கைப்பற்றும் தொகுதியில் வெளிப்படையாக தெரியும். வடக்கு குஜராத்தில் ஆம் ஆத்மி சற்று ஓங்கியிருக்கும். காங்கிரஸுக்கு இங்கு 7 முதல் 11 இடங்களுக்கு மேல் வாய்ப்பே இல்லை.
வடக்கைப் போல் தெற்கு குஜராத்திலும் சில பாஜக சில சரிவை சந்திக்கும். வாக்கு சதவீதத்தில் இது எதிரொலித்தாலும் கூட கிடைக்கக் கூடிய தொகுதிகள் கடந்த தேர்தலை விட அதிகமாகவே இருக்கும். காங்கிரஸ் 4ல் இருந்து 8 இடங்களுக்குள் பெறும்.
கட்ச், சவுராஷ்டிரா பகுதியில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்திக்கும். அதேபோல் இங்கு பாஜகவுக்கும் பெரிய வாய்ப்பிருக்காது. இங்குதான் ஆம் ஆத்மி நிறைய இடங்களைப் பெறப்போகிறது.
பொறுப்பு துறப்பு: இந்த கருத்துக் கணிப்பு CVoter அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக CATI நேர்காணல் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதன் சாம்பிள் சைஸ் என்பது 22,807 ஆகும். இதில் தவறுக்கான வாய்ப்பு என்று பார்த்தால் ±3 to ±5% வரை இருக்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

