TN Fishermen Arrest: முடியாத சோகம்..! தமிழக மீனவர்கள் 32 பேர் கைது, 67 படகுகள் ஏலம் - இலங்கை கடற்படை அராஜகம்
TN Fishermen Arrest: தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Fishermen Arrest: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
தமிழக மீனவர்கள் 32 பேர் கைது
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 32 மீனவர்களை அந்நாட்டு கடற்பட கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இது மீனவ சமூக மக்களிடயே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். அது பெரும் பிரச்னையாக வெடித்தது. அதனை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், மேலும் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை கைது செய்யப்படும்போது, முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால், மத்திய மற்றும் மாநில் அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, எந்தவொரு நிரந்தர தீர்வும் கண்டபாடில்லை. ஏராளமான தமிழர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பலருக்கு கட்ட முடியாத அளவிலான அபரதமும் விதிக்கப்பட்டுள்ளது.
படகுகள் ஏலம்:
இதுவரை கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஏராளமான படகுகள், இலங்கை கடற்படை வசம் உள்ளது. இந்நிலையில் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 67 படகுகளை ஏலம் விடவுள்ளதாக, இலங்கை நீரியல் வளத்துறை அறிவித்துள்ளது. இது மீனவர்கள் மத்தியில் மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

