மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக.. அருணாச்சலில் நிலநடுக்கம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- மக்களவைத் தேர்தல்: நாளை முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்.
- எங்கு வாக்கு குறைந்தாலும் அதற்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்ல வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் எச்சரிக்கை.
- மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 21 பேரின் பட்டியல் வெளியீடு.
- திமுக போட்டியிடும் 21 தொகுதிகளில் 11 வேட்பாளர்கள் புதுமுகங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்.
- பழனி மாணிக்கம், செந்தில்குமார், பார்த்திபன் உட்பட 10 திமுக எம்பிக்களுக்கு சீட் மறுப்பு.
- பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- டிடிவி தினகரின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
- அதிமுகவில் திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு.
- நெடுந்தீவு பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 32 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.
- 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பிரேமலதா அறிவிப்பு.
- விளவங்கோடி தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- பாஜகவில் அமமுகவுக்கு 2, புதிய நீதிக்கட்சி, தமமுக, இ.ம.ச.மு.கவுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.
- அதிமுகவில் தேமுதிகவுக்கு 5, எஸ்டிபிஐ, புதிய தமிழக கட்சிக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.
- பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வதில் இழுபறி என தகவல்
இந்தியா:
- மக்களவை தேர்தல்: அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம்.
- மதச்சார்பற்ற நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் அவசியம் - அமித்ஷா.
- அருணாச்சலப் பிரதேசத்தில் அதிகாலையில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு.
- மக்களவைத் தேர்தல்: மராட்டியத்தில் 12 வேட்பாளர்களை இறுதி செய்தது காங்கிரஸ் கட்சி.
- போலி செய்திகளை கண்டறிந்து தடுக்க ஃபேக்ட் செக் குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டது மத்திய அரசு.
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ ஜெய்பிரகாஷ் பாய் படேல் காங்கிரஸில் இணைந்தார்.
- முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
உலகம்:
- ஐரோப்பாவில் முடக்கப்பட்ட ரஷ்ய நிதியை உக்ரைனுக்கு அளிப்பது திருட்டுச்செயல் - அதிபர்.
- சீனாவில் சுரங்க தடுப்புச் சுவரில் பேருந்து மோதி விபத்து - 14 பேர் உயிரிழப்பு.
- கடந்த ஆண்டு பதவியேற்ற வியட்நாம் அதிபர் வோ வான் துவாங் ராஜினாமா செய்தார்.
- அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கார் பதவி விலகப் போவதாக அறிவிப்பு.
- உக்ரைன் - ரஷ்ய போருக்கு பேச்சு மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்.
- ஜப்பான் அருகே தென்கொரிய சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் காணவில்லை என தகவல்.
- பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து - 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு.
- காஸாவில் அலிஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் 90 பேர் சுட்டுக்கொலை
விளையாட்டு:
- தோனிக்கு கிரிக்கெட் என்பது எல்லாமும் கிடையாது என்பதை அவர் எப்போதோ புரிந்து கொண்டார் என்று ஜாகீர் கான் கூறியுள்ளார்.
- ஐ.சி.சி டி20 தரவரிசை; பேட்டிங் பட்டியலில் முதலிடத்தில் தொடரும் சூர்யகுமார் யாதவ்
- ஐபிஎல் 2024: சென்னை - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்கிறது ஐபிஎல் 2024ல் 17வது சீசன்
- சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion