“அவர்தான் என் உலகம்” - பணியிடத்தில் அவமானப்படுத்தப்பட்ட தந்தை; நொறுங்கி போன மகனின் நெகிழ்ச்சிப் பதிவு!
65 வயதான இயற்பியல் ஆசிரியரான தனது தந்தைக்காக ஒரு மகன் ரெடிட்டில் பதிவிட்ட பதிவு பார்ப்பவர்களின் இதயங்களை கலங்கடித்துள்ளது.

65 வயதான இயற்பியல் ஆசிரியரான தனது தந்தைக்காக ஒரு மகன் ரெடிட்டில் பதிவிட்ட பதிவு பார்ப்பவர்களின் இதயங்களை கலங்கடித்துள்ளது.
ஒரு அனுபவம் வாய்ந்த இயற்பியல் கல்வியாளரான தனது 65 வயது தந்தைக்கு ஏற்பட்ட அவமதிப்பை ஒரு மகன் இணையத்தில் பகிர்ந்து கொண்டார். இந்த பதிவு, ரெடிட் இணையவாசிகளை கண்ணீர் விட வைத்துள்ளது.
இந்த பதிவு தனியார் நிறுவனங்களில் மூத்த ஆசிரியர்கள் நடத்தப்படும் விதம் குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது. மேலும் இந்தப் பதிவு, பலரையும் மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இதுகுறித்து அந்த மகனின் பதிவில், “என் அப்பா மிகவும் தகுதிவாய்ந்த இயற்பியல் ஆசிரியர். தனியார் பள்ளிகளில் அவருக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்பதுதான் ஒரே ஆசை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐஐடி கேபியில் எம்எஸ்சி பட்டம் பெற்றவரும், 30 வருட கற்பித்தல் அனுபவமுள்ளவருமான தனது தந்தை, பணியிடத்தில் திட்டுதல் மற்றும் அவமானங்களுக்கு ஆளானதாக அவர் தெரிவித்தார்.
தனது தந்தை ஒரு அழைப்பில் எப்படி உடைந்து போனார் என்பதை விவரித்தார். அவர் இனி அதைத் தாங்க முடியாது என்று சொன்னதாகவும் மகன் குறிப்பிடுகிறார்.
ஒரு வருடம் முன்பு தனது தாயை இழந்த அந்த இளைஞன், தனது தந்தையையும் இழக்க நேரிடும் என்ற தனது ஆழ்ந்த பயத்தை வெளிப்படுத்தினார்.
"அவரை இழக்க என்னால் முடியாது. எனக்கு எஞ்சியிருக்கும் ஒரே பெற்றோர் அவர்தான். அவர்தான் என் முழு உலகம். "அவரது குழந்தைப் பருவத்திலிருந்தே, அவர் துன்பங்களை அனுபவித்து வருகிறார். அவர் தனது குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, தனது கல்வியை முழுவதுமாக தானே முடித்தார்." " என அந்த மகன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நிதி நெருக்கடி காரணமாக மகன் தந்தைக்கு உதவுவதற்காக பகுதி நேர எழுத்து வேலைக்கு சென்று வருகிறார். இருப்பினும் அந்த வருமானம் குடும்பத்தை பராமரிக்க போதுமானதாக இல்லை எனத் தெரிகிறது. எனவே தந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தார். அதற்காக தனது தந்தைக்கு ஆசிரியர் வேலை வேண்டி இணையத்தில் தேடுதல் வேட்டையை தொடங்கினார்.
"உங்களுக்கு இயற்பியல் ஆசிரியர் தேவைப்பட்டால், என் அப்பாவுக்குக் கற்பிக்க ஆசை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவரால் கற்பிக்க முடியும். ஆன்லைன் வகுப்புகளை எப்படி எடுப்பது என்று நான் அவருக்குக் கற்றுக் கொடுத்து வருகிறேன், அவர் அதை மிகவும் பாராட்டுவார்." என குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவு விரைவாகப் பரவியது, பலர் ஆதரவு வார்த்தைகளை வழங்கி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

