(Source: ECI/ABP News/ABP Majha)
Rabies : ரேபீஸ் தொற்றால் உயிரிழந்த மாணவி.. சோகத்தில் மூழ்கிய வீடு.. அறிகுறி குறித்து அதிர்ச்சி தகவல்..
Rabies : கேரள மாநிலத்தில் நாய் கடித்து ஒரு மாதத்திற்கும் மேல் சிகிச்சை செய்தும், சிகிச்சை பலனில்லாமல் உயிரிந்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நாய் கடித்து ஒரு மாதம் கழித்து, ரேபீஸ் தடுப்பூசி செலுத்தியும் சிகிச்சை பலனின்றி உயிரிழிந்துள்ளார்.
ஸ்ரீலெட்சுமி (Srilakshmi) என்பவர் பாலக்காடு அருகே உள்ள மன்கரா (Mankara) பகுதியில் வசித்து வந்தார். இவர் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்களை கம்ப்யூட்டர் அப்ளிகேசன் (Computer Application (BCA) ) படித்து வந்தார்.
ரேபீஸ் தடுப்பூசி போட்டுகொண்டும் ஸ்ரீலெட்சுமி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 7-வது சிறுவன் ரேபீஸ் நோய்தொற்றால் உயிரிழந்ததும், அச்சிறுவனுக்கும் தடுப்பூசி செலுத்தியும் எவ்வித பலனையும் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய் கடித்து மூன்று வாரங்களுக்கு பிறகு அச்சிறுவன் இறந்துவிட்டான்.
ரேபீஸ் தொற்று ஏற்பட்டால் ஒரு வாரத்திற்கு பிறகு அறிகுறிகள் தெரிய தொடங்கும். நாய் கடித்த இடத்தில் வலி, தீவிர காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்டவை ஏற்படும். நாய் கடித்த இடத்தை உடனடியாக சோப் போட்டு நன்கு கழுவ வேண்டும். இதற்கு பிறகே அதற்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சைகள் தொடங்கப்படும்.
எப்படிப் பரவுகிறது ரேபீஸ் வைரஸ்?
ரேபீஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாய், பூனை, குரங்கு, நரி, வவ்வால், கீரிப்பிள்ளை, ஆடு, மாடு போன்ற விலங்குகள் மற்ற விலங்குகளையோ அல்லது மனிதர்களை கடிக்கையில் இந்த நோய் பரவ தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட விலங்குகளில் உமிழ் நீரிலேயே இதன் வைரஸ் காணப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தை சிதைத்து மரணத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்