மேலும் அறிய
Advertisement
ஃபாக்ஸ்கான் நிறுவன வளாகத்தில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரி சோதனை!
நாடு முழுவதும் உள்ள ஓப்போ செல்போன் நிறுவனத்தில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவன வளாகத்தில் இயங்கி வரும் பாரத் எஃப் ஐ எச் லிமிடெட் ( Bharat FIH limited) என்ற நிறுவனத்தில் அதிக வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து 15 - க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 2- வது நாளாக தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம்,ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் தொழிற்பேட்டையில் ஆட்டோமொபைல்,செல்போன்,இருசக்கர ,நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு விதமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஏராளமான சர்வதேச முன்னணி தொழிற்சாலை நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
அவ்வகையில் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் பிரபல செல்போன் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை நிறுவன வளாகத்தில் சாம்சங், ஒப்போ, எம்.ஐ, ஐ போன், விவோ உள்ளிட பல்வேறு நிறுவனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவனங்கள் தனி தனியாக செயல்பட்டு வருகிறது. இதில் எம்.ஐ செல்ஃபோனிற்கு உதிரி பாகங்களை தயாரிக்கும் மற்றொரு தனியார் தொழில்சாலை நிறுவனமான பாரத் எஃப் ஐ எச் லிமிடெட் ( Bharat FIH limited) என்ற நிறுவனம் கடந்த 2015 ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்நிறுவனத்தில் நேற்றிருந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்நிறுவனம் அதிக வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து 15 -க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அங்கு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.மேலும் இச்சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் சிக்க வாய்ப்பு உள்ளதாகவும், வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்ஸ்கான் தொழிற்சாலை நிறுவன வளாகத்தில் உள்ள மற்றொரு நிறுவனத்தில் திடீரென வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டம் வாபஸ்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாக்ஸ்கான் தொழிலாளா்கள் தங்கியுள்ள உணவு விடுதியில் தரமற்ற உணவு வழங்கிய நபா்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு தொடங்கி 17 மணி நேரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பின்னர் பலக்கட்ட பேச்சுவார்த்தைக்குபின்னர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓப்போ நிறுவனம்
அதேபோல் தனியார் செல்போன் நிறுவனமான ஓப்போ நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்திருக்கின்றன. அதனடிப்படையில் சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் இருக்கின்ற அந்த செல்போன் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் இந்த நிறுவனத்திற்கு தொடர்பு இருக்கின்ற பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. சென்னை, மும்பை, டெல்லி, உள்ளிட்ட நகரங்களில் இருக்கின்ற இந்த நிறுவன அலுவலகங்கள் மற்றும் அனைத்து நகரங்களிலும் சோதனை நேற்றையதினம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. சென்னையில் உள்ள ஓப்போ செல்போன் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருபதுக்கும் அதிகமான பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, செல்போன் நிறுவனம் முறையாக வருமான வரி கணக்கை செலுத்தவில்லை என்ற புகார் வந்தது. இதனால் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், சென்னை, உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என கூறியிருக்கிறார்கள். அத்துடன் இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் ஆய்வு நடைப்பெற்று வருவதன் காரணமாக, சோதனையைத் தொடர்ந்து நடைபெறும் இதற்கு பின்னர்தான் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் ஆவணங்களின் மதிப்பு உள்ளிட்ட தகவல்கள் தெரியவரும் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion