மேலும் அறிய

பர்மிட் இருக்கா... காரில் ஆர்.டி.ஓ. இருக்கார்: மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

இருவரும் லாரி டிரைவரிடம் பணம் பறித்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தன், மாதவன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர்:  தஞ்சை – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி ஏற்றி வந்த லாரியை மடக்கி வட்டார போக்குவரத்து அலுவலர் என மிரட்டி ரூ.16500ஐ பறித்த 2 பேரை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை இலுப்பப்பட்டு வையாபுரி திடல் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் பாரதி லாரன்ஸ் (32). இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையிலிருந்து நன்னிலத்திற்கு லாரி ஒன்றில் ஜல்லி ஏற்றிக் கொண்டு வந்தார். லாரியில் கிளீனராக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ராகேஷ் (20) உடன் வந்தார்.

தஞ்சை - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படைதளம் அருகில் லாரி வந்து கொண்டு இருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று லாரியை வழிமறித்துள்ளது. காரில் இருந்து இறங்கி வந்த ஒருவர் டிரைவர் பாரதி லாரன்ஸ்சிடம் லாரி எங்கிருந்து வருகிறது. பர்மிட் எங்கே என்று கேட்டுவிட்டு காரில் ஆர்.டி.ஓ. இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

நீங்கள் யார் என்று லாரி டிரைவர் பாரதி லாரன்ஸ் கேட்டுள்ளார். அதற்கு  ஆர்.டி.ஓ.வின் டிரைவர் என்று பதில் கூறிய அந்த நபர், லாரி டிரைவர் பாரதி லாரன்ஸ் சட்டைப்பையில் வைத்திருந்த லைசென்ஸ் மற்றும் பணம் ரூ.16,500ஐ எடுத்துக் கொண்டு வேகமாக காருக்கு சென்று விட்டார். உடன் அந்த காரை நோக்கி பாரதி லாரன்ஸ் மற்றும் ராகேஷ். இருவரும் சென்று எப்படி நீங்கள் பணத்தை எடுக்கலாம் என்று கேட்டுக் கொண்டே இருக்கும் போது அந்த 2 பேரும் காரை நகர்த்தி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் செய்வதறியாமல் பாரதி லாரன்ஸ் அங்கேயே நின்றுவிட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து லாரி டிரைவர் பாரதி லாரன்ஸ் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து போலீசார் அந்த வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற் கொண்டனர்.

இதில் லாரி டிரைவரிடம் இருந்து பணத்தை பறித்தது. தஞ்சாவூர் ஆர்.டி.ஓ.,வின் கார் டிரைவர் விவேகானந்தன் மற்றும் ஏஜெண்ட் மாதவன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரையும் தமிழ்ப் பல்கலைக்கழக  போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் இருவரும் லாரி டிரைவரிடம் பணம் பறித்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தன், மாதவன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget