Crude Oil Leak: மிக்ஜாம் புயல் தாக்கம்: கசியும் கச்சா எண்ணெய்: எண்ணூரில் அவலம்: களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்!
எண்ணூர் கொசஸ்த்தலை ஆற்றில் அதிக அளவில் கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது.
எண்ணூர் கொசஸ்த்தலை ஆற்றில் அதிக அளவில் கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது.
பெட்ரோலியம் தொழிற்சாலைகளில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் அங்கிருந்து வெளியேறும் கச்சா பொருட்கள்... இதனால் எண்ணூர் முகத்துவாரம் நிறம் மாறிக் காட்சி அளிக்கிறது.
தொடர்ந்து, எண்ணூர் cpcl அருகே மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வெளியேறிய கச்சா பொருட்கள் நீரில் கலந்து வருகிறது. இதனால், அந்த பகுதியில் தேங்கியுள்ள நீரில் ஏற்கனவே சாக்கடை நீர் கலந்துள்ள நிலையில், தற்போது கச்சா எண்ணெய்யும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.
எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம்.. இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர்.. இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும்.. வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு.. pic.twitter.com/EWukIUcWwT
— Mohan G Kshatriyan (@mohandreamer) December 7, 2023
இதையடுத்து, எண்ணூர் பகுதிகளில் தேங்கியுள்ள நீரில் எண்ணெய் கலப்பதாக இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம். இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர். இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும். வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு." என பதிவிட்டுள்ளார்.
இதனுடன் சேர்த்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் அப்பகுதி மக்களுக்கு உணவு கொடுப்பதற்காக இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பயணம் செய்கிறார். அதில் கச்சா எண்ணெய் கலந்து இருப்பதால் அப்பகுதியே கருப்பாக காட்சி அளிக்கிறது. அந்த வீடியோவில் பேசிய அந்த நபர், “தண்ணீர் கேட்டாங்கன்னு எடுத்துட்டு வந்தோம். இங்க பாருங்க எவ்வளவு கெமிக்கல் மிதக்குதுன்னு, எத்தனை வீடுகள் இருக்கு யாரும் இங்க இருக்குற மக்களை கண்டுக்கல. இங்க இருக்குற மக்கள் எனக்கு போன் பண்ணாங்க, நாங்க விஜய் மக்கள் இயக்கத்துல இருக்கோம். எப்பையாச்சும் ஹெல்ப்ன்னு கேட்டாங்கன்னா, நாங்க ஓடோடி வந்து செய்வோம். இன்னைக்கும் கூப்டாங்க வந்துருக்கோம். ” என தெரிவித்திருந்தார்.