Breaking News LIVE : Breaking News LIVE : பிரதமர் வருகையால் ரயில் சேவையில் மாற்றம்
BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம், தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07.04.2023 மற்றும் 08.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
09.04.2023 மற்றும் 10.04.202: உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
குண்டடம் (திருப்பூர்) 3, தாளவாடி (ஈரோடு), சங்கரிதுர்கம் (சேலம்) தலா 1 செ. மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்பது கரூர் பரமத்தியில் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி 39.5, ஈரோடு 38.8, சேலம் 38.1, திருச்சி 37.7 டிகிரி செல்சியஸ். சென்னை பொறுத்தவரை வெப்பநிலை குறைவாக இருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக தான் உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
அடுத்த சில தினங்களுக்கு மழை இருக்கும் என்றாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் வரும் நாட்களில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வெயில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Breaking News LIVE : பிரதமர் வருகையால் ரயில் சேவையில் மாற்றம்
பிரதமர் மோடி நாளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவு ரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ள மின்சார ரயில்கள் நேரமும், நாளை தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம்.
Breaking News LIVE : "பொது இடங்களில் முகக் கவசம் அணிவது நல்லது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பொது இடங்களில் முகக் கவசம் அணிவது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE : ”படுக்கை வசதிகள், மருந்து கையிருப்புகள் போதுமான அளவில் உள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள், மருந்து கையிருப்புகள் போதுமான அளவில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
Breaking News LIVE : ஏப்.12ல் ஆளுநர் மாளிகை முற்றுகை
ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஏப்ரல் 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ல் மாலை 4 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE : தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.