மேலும் அறிய

இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும்; ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன?

உணவு சாப்பிடுவது குறித்து விளங்களை ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவு சாப்பிடும்போது நாம் சரியான நேரத்தில், சரியான ஊட்டச்சத்து இருக்கிறதா என்ற கேள்விகள் ஏற்படுவது வழக்கம். இதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் அளிக்கும் விளக்கத்தை காணலாம். 

நாம் என்ன சாப்பிடுகிறோமா அதை வைத்தான் உடல்நலன் இருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. உடலின் வளர்சிதை மாற்றம், குடல் ஆரோக்கியம் ஆகியவை ரொம்பவே முக்கியம். குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செயல்பாடுகளுக்கும் மூளை செயல்பாடுகளுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அனுஸ்ரீ ஷர்மா தெரிவிக்கையில்,” நமது உடலின் செயல்பாடுகள் அப்படியே சூரியனைப் போன்றதுதான். உடலில் பகல் நேரத்தில் BMR (Basal Metabolic Rate) அதிகமாக இருக்கும். சூரியன் மாலை மறைந்ததும் BMR அளவு குறைந்துவிடும். அதற்கேற்றவாறு நான் சாப்பிட வேண்டும்.” என்று விளக்குகிறார். அதனால்தான் இரவு நேரத்தில் அதிக கலோரி உணவுகளை சாப்பிட கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டுகிறது. ஏனெனில் செரிமான திறன் குறைந்துவிடும். 

இரவு உணவை இரவு 8 மணிக்கு முன்பாக முடித்துக்கொளவ்து நல்லது. 7.30 மணிக்கு முன்பாகவே சாப்பிடுவது நல்லது. மாலை 6 மணிக்கு மேல் டீ, காஃபி குடிப்பது, சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ஆகியவற்றைத தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் தூங்கும்போது உடலில் மறுக்கட்டமைப்பு பணிகள் நடைபெறும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, அதற்கு ஏற்றவாறு 8-9 மனி நேரம் தூக்கம் என்பது அவசியம். இரவு நேரத்தில் தூங்க வேண்டும். இரவில் தூங்காமல் பகலில் தூங்கி அதை சரிசெய்து விடலாம் என்று நினைக்க வேண்டாம்.உடலின் ஆரோக்கியத்தை சாப்பிடும் உணவில் உள்ள சத்து முடிவு செய்கிறது. அதற்காகவே நேரத்திற்கு சாப்பிட்டுவிடுவது நல்லது. 

உடலின் circadian rhythms சீராக இருப்பது மிகவும் முக்கியம். இரவு வெகு நேரத்திற்கு பிறகு உணவு சாப்பிடுவது சர்கார்டியன் ரிதம் சீராக இருப்பதை தடுக்கும். இதனால் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ், வளர்சிதை மாற்றம் ஆகியவற்றில் கோளாறு ஏற்படும். இதனால் ஹார்மோன் சீரின்மை, உடல் எடை அதிகரிப்பு வளர்சிதை மாற்றத்தில் சீரற்ற தன்மை ஆகியவை ஏற்படும். 

பகல் நேரத்தில் கார்போஹைட்ரேட் சாப்பிடுவது நல்லது. அதுவும் நல்ல கார்போஹைட்ரேட் சாப்பிட வேண்டும். இரவில் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுவதில்லை. இது உடல் எடையை அதிகரிக்க செய்யும் வாய்ப்புகள் அதிகம். 

புரதச்சத்து, நார்ச்சத்து எதுவாக இருந்தாலும் மூன்று வேளை உணவிலும் இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் சாப்பிடுவது நல்லது அல்லது. சீரான உடற்பயிற்சியும் அவசியம் என்கின்ற்னர் நிபுணர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Apologize: 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி: காரணம் என்ன?
PM Modi Apologize: 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி: காரணம் என்ன?
இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்... பொதுமக்களே தவறவிடாதீர்கள்
இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்... பொதுமக்களே தவறவிடாதீர்கள்
“என்னை சகோதரியாகத்தானே பார்த்திருக்கணும்.. பொறாமைப்படுறீங்களே?” விஜய் மாநாட்டு தொகுப்பாளர் கவிபாரதி துர்கா பதிலடி..
“என்னை சகோதரியாகத்தானே பார்த்திருக்கணும்.. பொறாமைப்படுறீங்களே?” விஜய் மாநாட்டு தொகுப்பாளர் கவிபாரதி துர்கா பதிலடி..
IND vs NZ:
IND vs NZ:"ரோஹித் ஷர்மா தோல்வியால் துவண்டு போக மாட்டார்"- அடித்துச் சொன்ன ரவி சாஸ்திரி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annapoorani Arasu Amma : லிஸ்ட் பெருசா போகுதே 3வது திருமணத்திற்கு ரெடியான சர்ச்சை சாமியார் அன்னபூரணிPinarayi Vijayan Accident : விபத்தில் சிக்கிய பினராயி ஒன்றோடு ஒன்று மோதிய கான்வாய் பரபரப்பான கேரளாTeacher Slaps Student : மாணவியை தாக்கிய TEACHER நடுரோட்டில் நடந்த கொடூரம் அதிரடி காட்டிய போலீஸ்TVK Maanadu Issue உடைந்து கிடக்கும் நாற்காலிகள்குப்பைக் கூளமான மாநாடு திடல் விளாசும் உள்ளூர் மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Apologize: 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி: காரணம் என்ன?
PM Modi Apologize: 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி: காரணம் என்ன?
இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்... பொதுமக்களே தவறவிடாதீர்கள்
இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்... பொதுமக்களே தவறவிடாதீர்கள்
“என்னை சகோதரியாகத்தானே பார்த்திருக்கணும்.. பொறாமைப்படுறீங்களே?” விஜய் மாநாட்டு தொகுப்பாளர் கவிபாரதி துர்கா பதிலடி..
“என்னை சகோதரியாகத்தானே பார்த்திருக்கணும்.. பொறாமைப்படுறீங்களே?” விஜய் மாநாட்டு தொகுப்பாளர் கவிபாரதி துர்கா பதிலடி..
IND vs NZ:
IND vs NZ:"ரோஹித் ஷர்மா தோல்வியால் துவண்டு போக மாட்டார்"- அடித்துச் சொன்ன ரவி சாஸ்திரி
பணப்புழக்கம் இல்லையே... தீபாவளி செலவுகளால் மலைத்து நிற்கும் விவசாயிகள்
பணப்புழக்கம் இல்லையே... தீபாவளி செலவுகளால் மலைத்து நிற்கும் விவசாயிகள்
IPL Auction 2025:கேப்டனையே கழட்டி விட தயாராகும் கேகேஆர்!அடுத்த மூவ் என்ன?
IPL Auction 2025:கேப்டனையே கழட்டி விட தயாராகும் கேகேஆர்!அடுத்த மூவ் என்ன?
Sunita Williams: விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து - நெகிழ்ச்சி வீடியோ!
Sunita Williams: விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து - நெகிழ்ச்சி வீடியோ!
கேரளாவில் பயங்கரம்... கோவில் திருவிழாவில் வெடித்து சிதறிய பட்டாசுகள் - நள்ளிரவு நடந்தது என்ன?
கேரளாவில் பயங்கரம்... கோவில் திருவிழாவில் வெடித்து சிதறிய பட்டாசுகள் - நள்ளிரவு நடந்தது என்ன?
Embed widget