மேலும் அறிய

ஆணுறையால் உங்களின் துணைக்கு வலியா? எதனால்? தீர்வு என்ன? நிபுணர்கள் தரும் விளக்கம்..

சிலவற்றில் உள்ள லேட்டக்ஸ் அலர்ஜியாலும், nonoxynol-9 (N-9) எனப்படும் கலவை இருப்பதாலும், அல்லது சரியான லூப்ரிகேஷன் இல்லாததாலும் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம்.

"ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்; கூடியார் பெற்ற பயன்" என்று என்னதான் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக செக்ஸ் குறித்து எழுதி வந்தாலும், செக்ஸ் இன்றி அமையாது வாழ்வு என்று எவரும் மறுக்க இயலாத விஷயாமாக எல்லா உயர்களின் ஜீவனாய் ஒன்றி, ஊடுருவி இருக்கும் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு தயங்கியே நிற்கிறது இந்திய சமூகம். அதுபோக செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுவதை கேலிக்குரியதாகவும், அசிங்கமாகவும் பார்க்கிறது நம் சமூகம். அதன் பலனாக பலர் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் செக்ஸ் வாழ்வில் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

சரிபார்க்கப்படாத வெப்சைட்டுகளில் இருந்து எதையாவது படித்துவிட்டு தங்களது செக்ஸ் வாழ்வை கெடுத்துக்கொள்கிறார்கள். அதனாலேயே இது குறித்த விவாதங்களும், வழிகாட்டுதல்களும் அதிகம் எழ வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது. ஆணுறை பயன்படுத்துதல் என்பது பாலியல் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் சிறந்த வழி ஆகும். அது மட்டுமின்றி ஆணுறை என்பது நம் சமுதாயத்தின் மிக முக்கியமான பொருட்களில் ஒன்று, செக்ஸிலும் கூட. ஆனால் அதை பயன்படுத்துகையில் இருவரில் யாரோ ஒருவருக்கு வலி ஏற்படலாம். ஏன் வலி வருகிறது என்றும், அதற்கு என்ன தீர்வு என்றும் டாக்டர் சரன்ஷ் ஜெயின் கூறுகிறார்.

பெரும்பாலான ஆணுறைகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருந்தாலும், சிலவற்றில் உள்ள லேட்டக்ஸ் அலர்ஜியாலும், nonoxynol-9 (N-9) எனப்படும் கலவை இருப்பதாலும், அல்லது சரியான லூப்ரிகேஷன் இல்லாததாலும் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில், இந்த பிரச்சனைகள் ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கும் கூட வழிவகுக்கும். ஆணுறை உங்களை காயப்படுத்துவதற்கான சில காரணங்கள்:

  • குறைந்த லூப்ரிகேஷன் அல்லது யோனி போதுமான அளவு ஈரமாக இல்லாதது
  • லேட்டக்ஸ் அலர்ஜி
  • பழைய அல்லது காலாவதியான ஆணுறைகளைப் பயன்படுத்துதல்

மேலும், சில பெண்கள் ஆணுறைகளை விரும்புவதில்லை, ஏனெனில் அவை உடலுறவை சங்கடமானதாகவோ அல்லது வேதனையாகவோ ஆக்குகின்றன. நீங்கள் இந்த வகையை அனுபவித்தவராக இருந்தால், இந்தப் பரிந்துரைகள் உங்களுக்கு உதவக்கூடும்.

ஆணுறையால் உங்களின் துணைக்கு வலியா? எதனால்? தீர்வு என்ன? நிபுணர்கள் தரும் விளக்கம்..

  1. லூப்ரிகேட்டட் ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள்: லூப்ரிகேட்டட் ஆணுறைகள் என்பது லேட்டக்ஸ் ஆணுறைகள் ஆகும், அவை பெரும்பாலான மருந்தகங்களில் கிடைக்கும். அவை விந்தணுக்கொல்லிகள் அல்லது விந்தணு அல்லாத மசகு எண்ணெய் மூலம் செய்யப்பட்ட லூப்ரிக்கண்ட்டாக இருக்கலாம். எவ்வாறாயினும், பெரும்பாலான லூப்ரிகேட்டட் ஆணுறைகளில் உடலுறவுக்கு போதுமான லூப்ரிக்கண்ட் இல்லை. அதற்கு பதிலாக, இயற்கையான (நீர் சார்ந்த அல்லது சிலிக்கான் அடிப்படையிலான) லூப்ரிகண்டுகளைப் பயன்படுத்தலாம். பயன்படுத்தும் ஆணுறையை N-9 கலந்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இது உடலுறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
  2. ஆணுறைகளில் அதிக லூப்ரிகேஷனைச் சேர்க்கவும்: லூப் சேர்த்தல் ஒருபோதும் அதிகப்படியாக மாறாது, ஏனெனில் இது உடலுறவை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் உராய்வு மற்றும் வலியைக் குறைப்பதற்காக எளிதான வழியாகும். லூப்ரிகேட்டட் அல்லது லூப்ரிகேட்டட் அல்லாத ஆணுறையைப் பயன்படுத்தும்போது, ​​நீங்கள் கூடுதல் லூப்ரிகேஷன் பயன்படுத்தலாம். முறையான லூப்ரிகேஷன் உடலுறவை பாதுகாப்பானதாகவும் அழகானதாகவும் மாற்றும். ஆணுறையை லூப் செய்வது வலியை வெகுவாக குறைக்கிறது.
  3. லேட்டக்ஸ் அல்லாத ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள்: இதற்காக செய்யக்கூடிய மிக எளிதான விஷயம், லேட்டக்ஸ் அல்லாத ஆணுறைகளைப் பயன்படுத்துவதுதான். லேட்டக்ஸ் ஆணுறைகள் மிகவும் பொதுவானவை என்றாலும், பாலியூரிதீன் மற்றும் பாலிசோபிரீன் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட ஆணுறைகளும் கடந்த சில ஆண்டுகளில் பிரபலமாகி வருகின்றன.
  4. பாலியூரிதீன் ஆணுறைகள்: உங்கள் வழக்கமான ஆணுறைகளுக்கு பதிலாக பாலியூரிதீன் ஆணுறைகளை பயன்படுத்தலாம். ஏனெனில் அவை லேட்டக்ஸ் இல்லாதவை மற்றும் STD (பாலியல் ரீதியாக பரவும்) நோய்களுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன. இது போதவில்லை என்றால், நீங்கள் இந்த ஆணுறைகளுடன் எண்ணெய் சார்ந்த லூப்ரிகண்டுகளையும் பயன்படுத்தலாம்.
  5. பாலிசோபிரீன் ஆணுறைகள்: இந்த ஆணுறைகள் சிந்தட்டிக் லேட்டக்ஸால் செய்யப்பட்டவை, இது அலர்ஜிக்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கிறது. அதோடு அதில் வழக்கமாக பயன்படுத்தும் லேட்டக்ஸ் ஆணுறை போன்ற கிடைக்கும் செக்ஸ் அனுபவம் கிடைக்கிறது.
  6. வெவ்வேறு ஆணுறை பிராண்டுகளை முயற்சிக்கவும்: நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்டின் ஆணுறையைப் பயன்படுத்தும்போது எரிச்சல் ஏற்படுவதாக தோன்றினால், நீங்கள் வேறு பிராண்டை முயற்சிக்க வேண்டும். உடலுறவின்போது ஏற்படும் எரிச்சல் உங்கள் துணையை மிகவும் சங்கடப்படுத்தலாம், மோகவும் மோசமானது அது, சிறுநீர் பாதை நோய்த்தொற்று மற்றும் பாக்டீரியா வஜினோசிஸ் ஆகிய பாதிப்புகளை கூட ஏற்படுத்தவல்லது
  7. பெண்ணுறை பயன்படுத்தவும்: பெண்ணுறை பயன்பாடு அலர்ஜிக்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் பாலியூரிதீன் அல்லது பாலியெதரைப் பயன்படுத்துவதால், ரப்பர் ஒவ்வாமை வராமல் பாதுகாக்கப்படுகிறது. பெண்ணுறை என்பது ஒரு மென்மையான பிளாஸ்டிக் பை ஆகும், இது சிலிகான் லூப்ரிக்கண்ட் பூசப்பட்ட மேல் வளையத்துடன் யோனிக்குள் செருகப்படுகிறது. கர்ப்பம் மற்றும் STD க்கு எதிரான பாதுகாப்பு நிலை இந்த வகை உறைகளிலும் ஆணுறைகளைப் போலவே நன்றாகவே உள்ளது.
  8. ஆணுறைகளை சரியான இடத்தில் வைக்கவும்: ஆணுறைகள் குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமிக்கப்பட வேண்டும் மற்றும் காலாவதி தேதிக்குப் பிறகு பயன்படுத்தக்கூடாது. பர்ஸில் வைக்கப்படும் ஆணுறைகள் கடினமாகவும் உலர்ந்ததாகவும் மாறிவிடும். அவற்றை அணிவது கடினமாகவும் பயன்படுத்த சங்கடமாகவும் இருப்பது மட்டுமல்லாமல், அவை பாதுகாப்பாகவும் இருக்காது.
  9. உங்கள் துணைக்கு ஓய்வெடுக்க உதவுங்கள்: பிறப்புறுப்பில் அழுத்தம் கொடுக்கப்படும் போது, உராய்வு அதிகரிக்கலாம், இருவரில் ஒருவர் வலியை அனுபவிக்கலாம். பதற்றம் காரணமாக, யோனி இறுக்கமாகி, ஊடுருவலை கடினமாக்குகிறது. அந்த நேரத்தில் உங்கள் துணைக்கு ஓய்வெடுக்க உதவுங்கள், இது போன்ற நேரங்களில் முன்விளையாட்டை முயற்சிக்கவும்.

எல்லாவற்றுக்கும் மேல், உளவியல் ரீதியாக நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்காக ஆணுறை பயன்படுத்தி ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறீர்கள். மேலும் தகவக்களுக்கு மருத்துவரை அணுகி லேட்டக்ஸ் இல்லாத உடலுறவுக்கான வழியை கேட்டறியலாம். உங்களுக்கு அலர்ஜி ஏதாவது இருந்தால் மருத்துவர் அதற்கென சில விஷயங்களை பரிந்துரைப்பார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
TN Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு.! லிஸ்ட் இதோ.!
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
RCB Unbox Event 2025: அன்பாக்ஸ் ஈவென்டில் சிக்ஸர் மழை பொழிந்த ஆர்சிபி வீரர்கள் - வீடியோவை பாருங்க
TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
ராதிகாவை பார்க்கும்போது எல்லாம் செருப்பை பார்க்கும் ரஜினிகாந்த்! ஏன் இப்படி பண்றாரு?
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
பரோட்டோனா சும்மாவா.! உலகளவில் டாப் 8 இடங்களை பெற்ற இந்திய ரொட்டிகள்.!
Embed widget