Propose Day 2025 : சட்டென ஓகே சொல்லணுமா.. இப்படி ப்ரபோஸ் பண்ணுங்க... வேலன்டைன் வீக் கொண்டாட்டம்
Propose Day 2025 :காதலர் தின வாரத்தின் இரண்டாவது நாள் ப்ரபோஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. இது ஆண்டுதோறும் பிப்ரவரி 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ப்ரபோஸ்சல் டே-வில் கொடுக்க வேண்டிய பரிசுகள்
காதல் தலையணை
உங்கள் இருவரின் படத்தையும் கொண்ட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தலையணையுடன் உங்கள் துணையை ஆச்சரியப்படுத்துங்கள். இது அவர்கள் எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு பரிசு, உங்களை எப்போதும் அவர்களுக்கு நினைவூட்டும்.
வாசனை திரவியம்
உங்கள் காதலர் தினத்திற்கு அவர்கள் விரும்பும் அழகான நறுமணமுள்ள வாசனை திரவியத்தை பரிசளிக்கலாம். அவர்கள் அதை ஒவ்வொரு முறை உபயோகிக்கும் போதும், அந்த நறுமணம் உங்களையும் உங்கள் சிறப்புப் பிணைப்பையும் அவர்களுக்கு நினைவூட்டும்.
புத்தகங்கள்
உங்கள் துணை புத்தகப் பிரியராக இருந்தால், அவர்களுக்குப் பிடித்த புத்தகத்தைப் பரிசளிப்பது ஒரு நல்ல பரிசாகும். அவர்கள் அதைப் படிக்கும் ஒவ்வொரு முறையும், உங்கள் அன்பும் சிந்தனையும் அவர்களுக்கு நினைவூட்டப்படும்.
போட்டோ ஃப்ரம்:
உங்கள் இருவரின் புகைப்படங்களையும் இணைத்து போட்டோ ஃப்ரம் ஒன்றை பரிசாக அளிக்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

