Goa Trip Plan : கோவா போகணும்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்கீங்களா? இத படிங்க முதல்ல..
சூரிய உதயம், மறைவைப் பார்க்க இதை விட அழகான இடம் கிடைப்பது கடினம். மேலும் கோட்டையிலிருந்து கீழிறங்கும் பாதைகள் சுற்றிலும் இருக்கும் அழகை கண்டு ரசிக்க வகை செய்கின்றன.
கோவா போகணும்னு ப்ளான் இருந்தாலும், அதை தள்ளிப்போட்டுக்கிட்டே இருக்கீங்களா? இது சம்மர் டைம். யூஸ் பண்ணிக்கோங்க..
கோவா என்பது பலருக்கும் ஒரு உணர்வு. இந்த நகரம் உண்டாக்கியிருக்கும் திறப்புகள் அப்படியான ஈர்ப்பு விசையை அனைவருக்கும் தருகிறது. ஆனால், பிரபலமான கடற்கரைகள், கட்டிடங்கள், குளம்பி, உணவகங்கள், மதுகூடங்கள் தாண்டி சற்று வித்தியாசமான அனுபவங்களையும் கோவா தருகிறது. அப்படியான பட்டியலைப் பார்க்கலாம்.
- சப்போரா கோட்டை
வடக்கு கோவாவில் அரேபியக் கடல் முட்டும் இடத்தில் இந்த கோட்டை அமைந்திருக்கிறது. சூரிய உதயம், மறைவைப் பார்க்க இதை விட அழகான இடம் கிடைப்பது கடினம். மேலும் கோட்டையிலிருந்து கீழிறங்கும் பாதைகள் சுற்றிலும் இருக்கும் அழகை கண்டு ரசிக்க வகை செய்கின்றன.
- சிங்க்வரிம் கோட்டை
சிங்க்வரிம் கடற்கரையை இரண்டாய்ப் பிரிக்கும் இந்த கோட்டை நகரத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து பார்க்கக் கிடைக்கும் கடலின் முகங்கள் அரிது.
- கார்ஜியம் கோட்டை
கோவாவின் அழகிய அமைப்பைப் பார்க்க விரும்பினால் இந்த கோட்டைக்கு செல்ல வேண்டும். ஏனெனில், இது அமைந்திருக்கும் இடம் அப்படி. அளவில் சிறிய கோட்டையாய் இது இருந்தாலும் இது தரும் பார்வை அதற்கு ஈடு செய்கிறது.
- தெரகோல் கோட்டை
குவரிம் கரையிலிருந்து படகில் சென்றுதான் இந்த கோட்டையை அணுக முடியும். திரகோல் நதியை ஒட்டி இதன் மதில் தொடங்கும். இது தற்போது ஒரு உணவகமாக மாற்றப்பட்டிருக்கிறது.
- அகுவாடா கோட்டை
கோவாவின் பிரபலமான இந்த கோட்டையின் பெருமை இதன் கலங்கரை விளக்கம். இப்போது பயன்பாட்டில் இல்லாத இந்த கலங்கரை விளக்கத்தின் உயரம் நான்கு மாடிகள்.
- போன்டா கோட்டை
கோவாவில் போர்த்துக்கீசிய கட்டமைப்பில் இல்லாமல் மராத்திய கட்டடக் கலையமைப்பில் இருக்கும் ஒரே கோட்டை இது. தோட்டங்கள், அருகிலேயே பட்டாம்பூச்சி காட்சியகம் இருக்கும் இடம் இது.
- கோல்வலே கோட்டை
இப்போது இங்கு சிதிலங்கள் மட்டுமே மிஞ்சி இருக்கிறது. ஆதலால், வரலாற்று ஆர்வலர்கள் தவிர்க்க முடியாத இடம் ஆகியிருக்கிறது.
- ரெயிஸ் மேகோஸ் கோட்டை
சிறிது காலத்திற்கு இது சிறைச்சாலையாக இருந்திருக்கிறது. இப்போது அமைதியான இடத்தில், அற்புதமான காட்சியுடன் கடலின் கரையில் அமர்ந்திருக்கிறது.
மேலும் லைஃப்ஸ்டைல் செய்திகளைப் படிக்க.. இந்த லிங்குகளைக் க்ளிக் செய்யுங்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்