News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

KolaPasi Series 20 | மனம் மயக்கும் மல்லாட்டை துவையலும் விட்டுத்தர முடியாத பங்குக்கறியும்- திருவண்ணாமலை உணவு உலா

’’முந்தைய தினத்தின் மீன் குழம்புடன் தோசை சாப்பிட்டுப் பாருங்கள். தோசை என்பது மீன் குழம்புடன் சாப்பிடவே கண்டுபிடிக்கப்பட்டது போல் நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்'’

FOLLOW US: 
Share:

திருவண்ணாமலை, திண்டிவனம், கள்ளக்குறிச்சி, வேலூர், ஆரணி, வந்தவாசி என்கிற இந்த நிலப்பகுதி என்பது தமிழகத்தின் பரபரப்பான அரசியல் பக்கங்களில் இடம் பெறும் ஊர்கள். சோழர்கள் காலம் தொடங்கி ஆங்கிலேயர்கள் காலம் வரை முக்கிய கேந்திரமாக விளங்கி வந்துள்ளது. திருவண்ணாமலை என்றாலே என் மனதில் எப்பொழுதும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். மலை, கோவில், ஆன்மீகம், வெளிநாட்டினர், உணவு, இசை, இலக்கியம், வயல்வெளிகள், பனை மரங்கள், குளங்கள் என பலப் பல வார்த்தைகள் கொண்டு நிரப்பினாலும் திருவண்ணாமலையை வர்ணித்துவிட இயலாது. ஒரு மலையின் அடிவாரத்தில் மக்கள் கூடியபடியே இருக்கிறார்கள், ஆயிரம் ஆண்டுகளாக கூடிக் கொண்டேயிருக்கிறார்கள், இந்த மலை தான் இந்த ரசவாதத்தை நிகழ்த்தும் முக்கியக் காரணி. நான் ஒவ்வொரு முறை திருவண்ணாமலை செல்லும் போதும் நள்ளிரவில் இந்த மலையைச் சுற்றி வருவேன். இரவின் நிசப்தத்தில் இந்த மலை இன்னும் கம்பீரமாக வானத்தை எட்டிப்பிடித்து நிற்கும், இருளில்  நடக்க நடக்க மனிதர்களின் பேச்சொலி காதில் இதமாய் ஒலித்தபடியிருக்கும். 


திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் நடைபெறும் தீபத்திருவிழா மட்டும் அல்ல ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கூட அங்கே ஒரு பெரும் கூட்டம் அலைமோதும். எத்தனை லட்சம் பேர் கூடினாலும் அத்தனை பேருக்கும் இந்த மலையடிவாரத்தின் 13 கிமீ நீள்வட்டத்தில் வித விதமான உணவு இலவசமாக விநியோகித்தபடி குழுக்கள் மும்முரமாய் இயங்கியபடி இருப்பார்கள். திருவிழாக்களின் போது மட்டும் அல்ல தினசரி எப்பொழுது மலையைச் சுற்றி வந்தாலும் யாரோ ஒருவர் வாகனத்தில் உணவை விநியோகித்தபடி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். உணவு மட்டும் அல்ல தேநீர், வடைகள் முதல் அவித்த பயறுகள் வரை எல்லா விதமான உணவுகளும் திருவண்ணாமலையில் இலவசமாகவே  யாராவது ஒருவர் விநியோகம் செய்தவண்ணம் இருப்பார். இந்தியாவில் பெரிய நிறுவனங்கள், கோவில் நிர்வாகங்களின் உதவிகள் இல்லாமல் மக்களே இவ்வாறு உணவை விநியோகம் செய்யும் ஏற்பாடு வேறு எங்குமேயில்லை. 


திருவண்ணாமலையில் வள்ளலார் மெஸ்,  கருப்பையா மெஸ், ஆச்சி மெஸ்,  ஆகாஷ் இன், அரோ உஷா ரெஸ்டாரண்டு, திரு ஜெர்மன் பேக்கரி, ஹோட்டல் கண்ணா, பைவ் எலிமெண்டஸ், அன்னம் அருணை ரெஸ்டாரண்டு, கறி விருந்து, ஸ்டார் பிரியாணி, தி ட்ரீமிங் ட்ரி என பல சைவ அசைவ உணவகங்கள் உள்ளன. ஜவ்வாது மலையின் தினை மாவு, ரமணாஸ்ரமத்தில் திவ்யமான பில்டர் காபியை குடித்து விட்டு அப்படியே ஸ்பார்சா ரெசார்டில் ஒரு காரட் அல்வா சாப்பிட்டால் அன்றைய திருவண்ணாமலை மாலை ஆசிர்வதிக்கப்படும். திருவண்ணாமலை நகரத்தை விட்டு கொஞ்சம் வெளியே வந்து கிராமங்கள் நோக்கிச் சென்றால் கேழ்வரகுக் களியும் கேழ்வரகுக் கூழும் மணக்கும். திருவண்ணாமலை தொடங்கி அரக்கோணம் வரை இந்த நிலத்தில் கேழ்வரகு ஆட்சி செய்யும். கேழ்வரகில் முருங்கை இலையைப் பறித்துப் போட்டு அடை செய்து குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். இந்தப் பகுதி முழுவதுமே மானாவாரி நிலங்கள் தான், இந்த நிலங்களில் விளையும் எள்ளு, கொள்ளு, உளுந்து, துவரை, கம்பு, கேழ்வரகு இவர்களின் உணவுகளில் பிரதானமாக இடம் பெறும். விழுப்புரம் பக்கம் சென்றால் தான் கொஞ்சம் செழிப்பைக் கண்களில் பார்க்க முடியும், அங்கே தான் அரிசியையும் பார்க்க முடியும்.


திருவண்ணாமலை பகுதியில் மல்லாட்டைத் (நிலக்கடலை) துவையல் அருமையாக இருக்கும். சுடு சோற்றில் மல்லாட்டைத் துவையலுடன் நல்லெண்ணெய் ஊற்றினால் வருமே ஒரு வாசனை, இது பெரிய ரெசிபி எல்லாம் இல்லை, ஆனால் அற்புதமான காம்பினேசன். உடனடியாக இன்று செய்து சாப்பிடுங்கள் அவ்வளவு தான். மல்லாட்டைத் துவையல் போல் மல்லாட்டைச் சட்னி இருந்தால் இட்லி நான்கு சேர்ந்து உள்ளே போகும். கேழ்வரகு களியுடன் கறிக்குழம்பா அல்லது கருவாட்டுக் குழம்பா என்பது இன்றும் முடிவுக்கு வராத ஒரு வழக்காக இந்தப் பகுதியின் வீட்டு திண்ணைகளில் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. இந்தப் பகுதியில் இருக்கும் ஏரிகளில் அணைக்கட்டுகளில் மொத கொண்டை, நெத்திலி, கெழங்கா, பலாப்பொடி, கெளுத்தி, குறவை, உளுவை என விதவிதமான மீன்கள் கிடைக்கும்.  இந்த மீன் குழம்புகளில் முழுக் கத்தரிக்காயைக் கீறிப் போடுவார்கள், கத்தரிக்காயும் மீன்களுடன் குழம்பில் குதியாட்டம் போடும். அடுப்பில் இருந்து இறக்கும் போது கத்தரிக்காய்க்கு மீன் குணம் வந்து விடும், அதன் ருசி இத்தனை மெருகேறி நான் உண்டதில்லை. 

முந்தைய தினத்தின் மீன் குழம்புடன் தோசை சாப்பிட்டுப் பாருங்கள். தோசை என்பது மீன் குழம்புடன் சாப்பிடவே கண்டுபிடிக்கப்பட்டது போல் நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். திருவண்ணாமலையில் ஆடு வெட்டி கறியைப் பங்கு போடுவார்கள். ஆட்டை தோல் நீக்கி விட்டு குடல், ஈரல், தலைக்கறி, மூளை என ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து அனைத்திலும் பங்கு போட்டு பிரித்து எப்படி விநியோகிப்பார்கள். இரவானாலும் அதை உடனடியாக சமைத்து எப்படி அனைவரும் நள்ளிரவில் சாப்பிடுவார்கள் என்பதை தெரிந்துகொள்ள அவசியம் நீங்கள் எழுத்தாளர் பவா. செல்லத்துரையின் எழுத்தில் பங்குக்கறியும் பின்னிரவுகளும் கட்டுரையை வாசித்துப் பார்க்க வேண்டும். 

இரவு முழுவதும் அடுப்பின் கங்கில் மண் சட்டியில் ஆட்டுக் கால்கள் வெந்து கொண்டிருக்கும், காலையில் அதனுடன் மெச்சையைப் போட்டு ஒரு குழம்பு வைத்தார்கள் எனில் இது தான் இட்லியின் இணைபிரியாத கூட்டணி. கீரைகளை கடைந்து வடகம் போட்டுத் தாளித்து குழம்பில் போடுவார்கள், இந்த வடகங்கள் குழம்பின் ருசியை வானுயர உயர்த்தும் என்றால் மிகையில்லை. கொஞ்சம் வடக்காக பேரனாம்பட்டு, ஆம்பூர், குடியாத்தம், திருப்பத்தூர் பகுதிகளில் ஆட்டுக்கால் பாயாவுடன் உணவு அதிகாலையிலேயே கிடைக்கும். வேலூர் சென்றால் சிவா பிரியாணி, அம்மா பிரியாணி, தோட்டப்பாளையம் கிராண்ட் பிரியாணியை நான் தவறவிட்டதில்லை.  வேலூரில் கிடைக்கும் நல்ல காரமான சிக்கன் வருவல், பழம் தோசை, வெள்ளாட்டுக் கறி நல்லி, கயிறு கட்டிய கோலா உருண்டை, நல்லி எழும்புத் தொக்கு, கோதுமை இடியாப்பம், பெசரட்டு தோசை எல்லாம்  தவறாமல் தேடித் தேடி சாப்பிடுங்கள். 


 

ஆர்காட்டு கபாப், ஆரணி மக்கன் பேடா, இராணிப்பேட்டை சுட்டகோழி என இவை எல்லாம் உங்களை சுண்டி இழுத்தால் நிர்வாகம் பொறுப்பல்ல. திருவண்ணாமலைப் பகுதி என்பதே சுண்டி இழுக்கும் உணவுப் பிரதேசமாக எனக்குக் காட்சியளிக்கும். வெளிநாட்டினர் வருடம் முழுவதும் இங்கே தங்கியிருப்பதால் பல அற்புதமான அடுமனைகளை இங்கே இயக்கி வருகின்றனர், பல விதமாக ரொட்டிகள், கேக்குகள் அவர்களே அசலான சுவையில் செய்து வருகிறார்கள். பொதுவாக நம் வீடுகளின் அடுப்படிகள் குடும்பத்தாருக்கு மட்டுமே சமைத்து பழகியவை.

நம் இறுக்கமான குடும்ப அமைப்பில் அன்னியர்களுக்கு முகம் அறியாதவர்களுக்கு இடமில்லை, அதற்கு மேல் எனில் மிஞ்சியதும் பழையதும் மட்டுமே வெளியே வரும். வடலூரில் வள்ளலார் மூட்டிய அணையா அடுப்பு போலவே திருவண்ணாமலையில் பவா.செல்லத்துரை- ஷைலஜா வீட்டிலும் ஒரு அணையா அடுப்பு இருப்பதை என் ஒவ்வொரு பயணத்திலும் பார்த்து வியந்திருக்கிறேன். இந்த அடுப்புகள் அன்னியர்களுக்கு சதா சமைத்து கொட்டிய வண்ணம் இருக்கிறது.  உலகம் முழுவதுமே இப்படி அறியாதவர்களுக்கும் சமைக்கும் மனம் இருக்கிறதே அது தான் இலக்கியமும் அறமும் பேசுகிற மனம். இயன்ற நேரம் எல்லாம் இந்தக் கைகளுடன் இணைந்து சமையல் வேலை செய்ய வேண்டும், இந்தக் கைகளுக்கு முத்தமிட வேண்டும்.

Published at : 18 Mar 2022 12:34 PM (IST) Tags: thiruvannamalai Lamb Kolapasi Food Series Mallattai Chutney Pava.Sellathurai\

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?

Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து