உளவுத்துறை கொடுத்த அலர்ட்.. ஏர்போர்ட்டில் நடிகையை மடக்கி பிடித்த அதிகாரிகள்.. எல்லாருக்கும் ஷாக்!
துபாயிலிருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்த பெண் பயணியை சோதனை செய்ததில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகளிடம் பிடிபட்டவர் கன்னட நடிகை ரன்யா ராவ் என தெரிய வந்துள்ளது.

உளவுத்துறை அளித்த தகவலின்படி, துபாயிலிருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்த பெண் பயணியை சோதனை செய்ததில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகளிடம் பிடிபட்டவர் கன்னட நடிகை ரன்யா ராவ் என தெரிய வந்துள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு:
எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
இந்த நிலையில், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்ற ஒரு பயணி பிடிபட்டார்.
குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், கடந்த 3ஆம் தேதி துபாயிலிருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்த சுமார் 33 வயதுடைய இந்தியப் பெண் பயணியை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அதிகாரிகளுக்கு ஷாக்:
இந்த சோதனையில், 14.2 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை அவர் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. 1962 சுங்கச் சட்டத்தின் விதிகளின் கீழ் ரூ.12.56 கோடி மதிப்பிலான அந்தத் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, பெங்களூருவின் லாவெல் சாலையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும், ரூ.2.67 கோடி மதிப்புள்ள இந்திய ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், அந்தப் பெண் பயணி 1962 சுங்கச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மொத்தம் ரூ.17.29 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர், மேற்கொண்ட விசாரணையில் அதிகாரிகளிடம் பிடிபட்டவர் கன்னட நடிகை ரன்யா ராவ் என தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில் டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள்தான் ரன்யா ராவ்.
நான்கு நாள்களுக்கு முன்பு கூட, பஞ்சாப் விமான நிலையத்திற்கு வந்த நபரிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: Railway Update: தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி..! எழும்பூருக்கு நோ, தாம்பரத்திலேயே ஹால்ட் - எந்தெந்த ரயில்கள் தெரியுமா?

